பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

茨6 மண்ணியல் சிறுதேர் மறுக்கும் சூத்திரகன் ஆதரவாளர்கள் மிருச்சகடிகம், சாருதத்தத்தில் இல்லாத அரசியல் நிகழ்ச்சியைச் சார்புப் பொருளாகக் (Sub-Plot) கொண்டுள்ளது. இச்சார்புப் பொருள்சாருதத்தன்-வசந்தசேனை காதலாகிய தலைமைப் பொருளோடு * (Main-Plot)பின்னிச்சிறக்கச் செய்த பெருமை சூத்திரகனுக்கேயுரியது; இங்ங்னம் தனித்திறன் மிக்க சூத்திரகன் மற்றொருவர் எழுதிய நாடகத்தைத் தம் நாடகத்துள் சேர்த்து முழுச்சொந்தம் கொள்ளவேண்டிய தில்லை; அவ்வாறு செய்திருந்தால் அவர் கீர்த்திக்கு பங்கம் ஏற்பட்டிருக்கும்; அதற்குப் பதிலாக வேறு ஒரு நாடகத்தை எழுதியிருப்பார் என்கிறார்கள். மேலும், மிருச்சகடிகத்தை கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இருந்த வாமனன் என்பார்தம் நூலுள் எடுத்தாள்வதுடன் சூத்திரகனையும் குறிப்பிடு வதால் மிருச்சகடிகத்தின் ஆசிரியரைப்பற்றிய விவாதத் திற்கு இடமில்லை; ஆனால் சாருதத்தத்தின் ஆசிரியர் பாசன் என்று கணபதி சாஸ்திரியாருக்கு முன்பு யாரும் குறிப்பிடவில்லை; ஆதலால் மிருச்ச்கடிகத்தின் மேடை வடிவச் சுருக்கமே சாருதத்தம் என்றும் கூறுகிறார்கள். இவ்விரு திறத்தாரின் உரைகளைப் பற்றுரைகள் என்று பாராட்டிச் செல்லுவதோ, 'வெற்றுரைகள் என்று வெறுத்துத் தள்ளுவதோ நம் பணியன்று. சமன் செய்து சீர்தூக்குவதே நமக்குரிய பணி; நமக்குரிய அணி. சாருதத் தத்தோடு பாசன் பெயர் சுட்டப்படவில்லை என்பதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. அதுபற்றிக் கவலைப் டவும் வேண்டியதில்லை. சாருதத்தம் மிருச்சகடிகத்திற்கு லமா? இல்லையா? மூலம் என்று முடிவான பின்னும் f இதனை வடநூலார் பிராசங்கிகம் என்பர். ★ இதனை வடநூலார் ஆதிகாரிகம் என்பர்.