பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மண்ணியல் சிறுதேர் சகடிகத்தின் இரண்டாம் அங்கத்திற் காணப்படும் மாதுரன், தருத்துரகன் என்போர் சாருதத்தத்தில் வரவில்லை. மூன்றாம் அங்கம் இருநாடகங்களிலும் ஒத்தபான்மையது. நான்காம் அங்கத்திலே மதனிகை சஜ்ஜாலகன் (சருவிலகன்) உரையாடுதல் வசந்தசேனையின் செவிப்படுந் தருணத்திலே விதூடகன் இடையே தோன்று கிறான்; விதூடகன் போன பின்னரே சஜ்ஜாலகன் வசந்தசேனையின் முன் வருகிறான்; மிருச்சகடிகத்தில் இவ்வங்கம் வேறு வகையாக நடக்கிறது. இவற்றைச் சாருதத்த வெளியீட்டின் ஆங்கில முகவுரையில் எடுத்துக்காட்டிய கணபதி சாஸ்திரியார் 'சாருதத்தத்திற் குறிப்பாகச் சுட்டப்பட்டவை மிருச்சகடிகத்தில் விரிவுறக் கூறப்படுகின்றன என்கிறார்." இங்ங்ணம் சாருதத்தத்தை மூலமாய் - முதலாய்க் கொண்டதால் மிருச்சக்டிகத்திற்குச் சிறப்பிடம் இல்லாமற் போய்விடவில்லை. கணபதி சாஸ்திரியார் மிருச் சகடிகத்தைச் 'சூத்திரகன் இயற்றிய கீர்த்தி வாய்ந்த மிருச்ச கடிகம்...' என்றே குறிப்பிடுகிறார். மேலும், அவரே, மிருச்சகடிகத்தின் தனித்தன்மையை உயர்த்திக்காட்டும் அரசியல் நிகழ்ச்சி (Sub-Plot) சாருதத்தத்தில் இல்லை என்று ஒப்புக்கொள்கிறார்; 'ஆரியக பாலகர் கதை சாருதத்தத்தில் யாண்டுங் காணப்படவில்லை' என்கிறார். மிருச்ச கடிகத்தில் அரசியல் நிகழ்ச்சி ஐந்தாம் அங்கத்திற்குப் பிறகுதான் வீறுகொள்கிறது; ஆனாலும் ஆரம்ப முதல் அது குறிப்பாக உணர்த்தப்படாமல் இல்லை. முதல் அங்கத்தின் முன்னுரையில் சூத்திரதாரன், ஆண்டுகொண்டிருக்கும் அரசன் பாலகனைச் "சினமிக்க பாலகன்' என்று விபுலானந்த அடிகளார் அணிந்துரை, மண்ணியல் சிறு தேர், . 22-23.