பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு - - 39 குறிக்கின்றான். இரண்டாம் அங்கத்தில் தருத்துரகன் என்பான் சூதுகளத் தலைவன் மாதுரனோடு பகைத்ததால் அரசனின் பகைக்கும் ஆளாக நேரிடும் என்று அஞ்சி ஆரியகனைப் பின்பற்றப் போவதாகக் கூறுகிறான். மூன்றாம் அங்கத்தில் சாருதத்தனால் பாராட்டப்படும் இரேபிலன் என்னும் இசைப்பாடகன், நான்காம் அங்கத்தில் ஆரியகனின் இடுக்கண்களையும் தோழனாகிய சருவிலகனின் நண்பனாகத் தென்படுகிறான். 'பாலகன் என்னும் அரசனால் என் அன்புமிக்க நண்பன் ஆரியகன் சிறைப்பட்டான் கொல்?" என்றுள்ளம் வருந்தித் தன் காதலி மதனிகையை இரேபிலன் இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு செய்துவிட்டு, - 'அறம்மிகுசீர் உதயணனை யெளகந்த ராயணனாம் அமைச்சன் முன்னர்ச் சிறைவிடுத்தாங்(கு) என தன்பன் ஆரியகன் சிறைவிடச் செய்வனின்றே" என்று சருவிலகன் வீரமுழக்கமிட்டுப் புறப்படும்போது போர் ஆரம்பமாகப் போகிறது என்று எண்ணுகிறோம். இவ்வாறு முதல் நான்கு அங்கங்களில் அரசியல் மாற்றத்திற்குரிய விதை ஊன்றப்படுகிறது; நீர் ஊற்றப் படுகிறது. சாருதத்தத்தில், ஒரங்கத்தில்கூடக் காணப்படாத இச்சார்புப் பொருள் (Sub-Plot) மிருச்சகடிகத்தில், முதல் அங்கத்திலேயே காட்சி தருகிறது. இது ஒன்றே மிருச்சகடிகத்தின் தனித்தன்மைக்கும் சூத்திரகனின் படைப்பாற்றலுக்கும் சான்று கூறப் போதும்.

  • உச்சவினி மன்னனாகிய சண்டமகா சேனனாற் சிறைப்படுத்தப்பட்ட உதயணனை யெளகந்தராயணன் என்னும் பெயருடைய பூகி என்னும் அமைச்சன் சிறையிலிருந்து விடுவித்ததைப்போல என் நண்பன் ஆரியகனை விடுவிப்பேன் என்கிறான் சருவிலகன்.