பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3? மண்ணியல் சிறுதேர் தொடர்பு, பாமர மக்கள் வாழ்க்கையில் ஈடுபாடு ஆகிய பண்புகள் வடமொழி நாடகங்களில் மிகவும் அரிதான பண் பாடுகள் ஆகும். எனவே, மேனாட்டாசிரியர்கள் இதனைக் காளிதாசன் சாகுந்தலத்துக்கு அடுத்தபடி எடுத்துப் பாராட்டியதில் வியப்பில்லை என்கிறார் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார். இது பல்வேறு உரைகள் (Commentaries) கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் பல்வேறு இந்திய மொழிகளிலும் பெயர்க்கப்பெற்றுள்ளது. எல்லா வற்றிற்கும் மேலாகக் கன்னற் பொருள் தரும் தமிழில் முதுபெரும் புலவர் கதிரேச செட்டியாரால் மொழியாக்கம் பெறும் பெரும்பேறு பெற்றுள்ளது! - 5 பண்டிதமணி 'இது (தமிழ்) மற்றொரு மொழியினின்றும் தோன்றிய தென்றாதல் பிறிதொன்றன் சார்பின்றி நடைபெறா தென்றாதல் கூறுவர் உண்மை ஆராய்ச்சி இலராவர்' இவ்வாறு, ஒரு காலத்தில், ஒரு சில வடசொற்கள் உண்மை பற்றித் தமிழ் மொழியை வடமொழியினின்றுந் தோன்றியதென்று எண்ணியோரை இடித்துரைத்தவர் அவர் ஏதோ, தமிழை மட்டும் - ஓரிரண்டு தமிழ் ఒుతో இலக்கியங்கள், ப. 157, * **aššš and (A.W. Rider), snipitiési (Karmarkar) போன்றோரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இக்குறிப்பு, விசு. திருநாவுக்கரசு எழுதிய பண்டிதமணி என்னும் நூலில் காணப்படுகிறது. ப. 39.