பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 33 இலக்கியங்களை மட்டும் - படித்துவிட்டுச் சொன்னவரா அவர்? இல்லை "செந்தமிழும் ஆரியமும் முற்றவுணர் நுண்மதியான்' என்று தம் ஆசிரியர் அரசஞ் சண்முக னாராலேயே பாராட்டப்பட்டவர் அவர் 'ஆரியத்தின் நிலைகண்டோன் அரிய தமிழின் கடலானோன்' என்று கவிமணியால் போற்றப்பட்டவர் அவர் ஏழு மாதங்கள் கூடப் பள்ளிக்கூடத்தில் பயிலாமல் ஒரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக விளங்கியவர் அவர் அவர்தான், மகாமகோபாத்தியாய, முதுபெரும் புலவர், பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்! பண்டிதமணி, மகிபாலன்பட்டியில் 16-10-1881இல் பிறந்தார். தமது சொந்த முயற்சியால் எண்ணற்ற தென் மொழி வடமொழி நூல்களைக் கற்றுப் புலமை பெற்றார். ஏனைய நகரத்தார்களைப் போலப் பண்டிதமணிக்குப் பொருள் ஈட்டவேண்டும் என்னும் அவா இல்லை; மாறாகப் பொருள்மிக்க இலக்கியச் செல்வத்தை ஈட்டவேண்டும் என்னும் எண்ணமே இருந்தது. இவ்வெண்ணத்தை நிறைவேற்றத்தானோ என்னவோ அவருக்குக் கால் ஊனமாக இருந்தது. 'பண்டிதமணிக்குக் கால் ஊனமாக இருந்ததால் அவரால் வெளியூர்களுக்குச் செல்ல இயலவில்லை; வீட்டிலேயே இருந்து பொழுதுபோவதற்காகப் படிக்கத் தொடங்கினார். அதன் பயனாகத் தமிழறிஞர் ஆனார். அவருக்குக் காலில் ஊனம் இல்லாதிருந்தால் ஏனைய செட்டியார்களைப்போல் அவரும் திரவியம் தேடத் திரை கடல் தாண்டியிருப்பார் வட்டிக் கடை வைத்திருப்பார்' என்கிறார் பண்டிதமணியின் பாஸ்வல்.

சாமலெ, பல்சுவைக் கட்டுரைகள், ப.90.