பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மண்ணியல் சிறுதேர் பண்டிதமணிஏறாத மேடையோ, தலைமை வகிக்காத மாநாடோ அந்நாளில் இல்லை எனலாம். "இலண்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஹரால்டு லாஸ்கி அரசியல் தத்துவத்தைப் பற்றிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தும்போது அப்பாடத்தை எடுத்துப் படிக்காத மாணவர்கூட அங்கு வந்து, கூட்டம் கூட்டமாகக் கூடுவார்கள். அதுபோல் பண்டிதமணி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாடம் நடத்தியபோது மாணவரே யன்றி ஆசிரியரும் அவர் வகுப்புக்கு வரலாயினர். of இவ்வாறு அவருடைய சொற்பொழிவுகளுக்கும் வகுப்புகளுக்கும் மக்களை மிகுதியாக வரச்செய்தவை அவருடைய அறிவும், எதையும் விளங்குமாறு சொல்லும் ஆற்றலும் ஆகும். இவற்றைவிட இன்னுமொரு முக்கிய காரணம், அவருடைய நகைச்சுவை. 'பெண்கள் கூட்டம் ஒன்றில் அவர் தலைமை வகித்தார். ' கூடியிருந்த பெண்கள் வழக்கம் போலப் பேசிக்கொண்டே இருந்தனர். ஒரு சிலர் மேடைக்கு வந்து 'அமைதியாக இருக்கவேண்டும், அமைதியாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் பெண் மணிகள் அல்லவா, ஒலித்துக்கொண்டுதானே இருப் பார்கள்?’ என்று அப்போது பண்டிதமணி சொன்னார். இப்படி நகைச்சுவையான நிகழ்ச்சிகள் நூற்றுக்கண்க்கில் பண்டித மணியின் வாழ்க்கையில் உண்டு. + * சோமலெ பல்சுவைக் கட்டுரைகள் ப.91. ★ சொற்பொழிவுத் துறையில் பண்டிதமணிக்கு வழிகாட்டியவர் ஞானியார் சுவாமிகள் என்பர். § சோமலெ, பல்சுவைக் கட்டுரைகள், ப. 82.