பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 35 கதிரேசனார் தமிழை வளர்க்க மேலைச் சிவபுரியில் சன்மார்க்க சபையைத் தோற்றுவித்தார். அச்சபை, டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் தலைமையில் பண்டிதமணி என்ற பட்டத்தை அவருக்கு வழங்கியது. தம் நுட்பமான மதிநலம் புலப்படத் திருவாசகத்தின் பகுதிகளாகிய திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை ஆகியவற்றிற்குப் பேருரை வழங்கினார். அவரது திருச்சதக உரை 1950 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக் கழகத்தாரின் ஆராய்ச்சித்துறைக்குரிய பரிசினைப் பெற்றது. பண்டிதமணியின் வடமொழிப் புலமை தமிழை வளப்படுத்தவே பயன்பட்டது. பல வடமொழி நூல் களையும் சுவைகுன்றாமல் தமிழில் மொழிபெயர்த்தார். 'இவர் மொழிபெயர்த்துள்ள பிரதாப ருத்தரீயம், மாலதிமாதவம் என்னும் இரண்டு நூல்களும் இன்னும் அச்சிடப்படவில்லை. சுக்கிர நீதி, சுலோசனை, உதயணசரிதம், கெளடிலீயம், மண்ணியல் சிறுதேர் போன்ற நூல்கள் பண்டிதமணியின் மொழிபெயர்ப்பு நூல்கள். இவற்றுள் மண்ணியல் சிறுதேர் அவருடைய இருமொழிப் புலமைக்கு ஒர் உரைகல். ... "கதிரேசனார் காவியமானார் காவியம் அவராயிற்று' என்று தமிழ்ப்பெரியார் திரு.வி.க. பண்டிதமணியின் புலமையை வியந்து பாராட்டினார். '... மணம் அறா நாண்மலர்; நீர் அறாத்தண்சுனை, உவர்ப்பிலாப் பெருங்கடல்... ' என்று மகிழ்ந்துரைக் கின்றார் பண்டிதமணியின் வாழ்க்கைச் சித்திரத்தை வரைந்த தமிழோவியர் விசு. திருநாவுக்கரசு.

  • சி.பி. கணேசன், தமிழ் வளர்த்த பேராசிரியர்கள். ப.85.