பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மண்ணியல் சிறுதேர் சொல்லாமலே விளங்குகிறதல்லவா? இந்த மூவரை மையமாக வைத்துத்தான் மிருச்சகடிகம் அல்லது மண்ணியல் சிறு தேர் இயங்குகிறது. இந்நாடக அமைப் பையும் சிறப்பையும் ஆராயுமுன் (உருவகமாகப் பார்த்த) கதையைச் சுருக்கமாகத் தெரிந்துகொள்வது நல்லது. கதை உச்சயினி நகரத்தில் நடக்கிறது. அங்கே அந்தண வணிகனான சாருதத்தன் வறுமையின் வளர்ப்புப் பிள்ளையாய் வாழ்கிறான். அவனிடம், கணிகையர் குலத்துதித்த வசந்த சேனை காதல் கொண்டிருக்கிறாள். அவள் மீது காமங்கொண்டிருக்கிறான், சகாரன் என்னும் அரசன் மைத்துனன். ஒரு நாள் வசந்தசேனை, தன்னைப் பின்பற்றும் சகாரனுக்கு அஞ்சிப் பொன்பற்றும் பொருட் பற்றும் இல்லாத சாருதத்தன் இல்லத்துள்நுழைகிறாள்தன் பொற்பணி முடிப்பை அடைக்கலமாக்கிச் செல்கிறாள். ப்ொற்பணி முடிப்பை இரவில் காக்க நியமிக்கப்பட்ட மைத்திரேயன் (சாருதத்தனின் பார்ப்பனத் தோழன்) உறங்குவதறிந்து சருவிலகன் என்னும் கள்வன் அதனைக் கவர்ந்து செல்கிறான். களவு நிகழ்ந்ததையறிந்து சாருதத்தன் வருந்துகிறான்; தன் மனைவி தூதை தந்த இரத்தினமாலையை மைத்திரேயன் மூலம் வசந்த சேனைக்குக் கொடுத்தனுப்புகிறான். இதற்கிடையில், தன் சேடியான மதனிகையை அடிமை யினின்றும் மீட்டு அவளுக்கு அடிமையாகும் ஆசையால் தன் பொற்பணியைச் சாருதத்தன் இல்லத்தினின்றும் சருவிலகன் திருடி வந்துள்ளான் என்று வசந்தசேனை அறிகிறாள். மதனிகையின் கருத்துப்படி வசந்தசேனை யிடம் பொற்பணியை அளித்து, மதனிகையை அழைத்துச் செல்கிறான் சருவிலகன்.