பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 41 அவன் சென்றதும், மைத்திரேயன் வசந்தசேனையைச் சந்திக்கிறான்; சாருதத்தன் சூதில் பொற்பணியை இழந்ததாகக் கூறி அதற்கு மாற்றுப்பொருளாக இரத்தின மாலையைக் கொடுத்துத் திரும்புகிறான். சாருதத்தன் பெருந்தன்மையை வசந்தசேனை போற்றுகிறாள்; காதல் பெருகிக், கார்கால இரவில் அவனைக் காணப் புறப்படு கிறாள். சாருதத்தன் இல்லம் அடைந்து பொற்பணியை அவனிடம் காட்டி அங்கேயே தங்கிவிடுகிறாள். அன்றைய இரவு அவர்களுக்கு அமுதாகிறது. பொழுது விடிகிறது, 'யான் விளையாடுதற்கு இம்மண் வண்டி வேண்டா, பொன் வண்டி வேண்டும்' என்று அழுதுகொண்டிருக்கும் சாருதத்தன் மைந்தன் உரோக சேனனிடம் தன் பொற்பணிகளைக் கழற்றிக் கொடுத்து விட்டுச் சாருதத்தன் தன்னை வரச்சொல்லிக் குறித்திருந்த புட்பகரண்டகம் என்னும் பூஞ்சோலைக்குப் புறப்படச் சித்தமாகிறாள் வசந்தசேனை; சாருதத்தன் வண்டி என்று எண்ணி அப்போது தெருவில் நின்றுகொண்டிருந்த சகாரன் வண்டியில் ஏறிவிடுகிறாள். (சாருதத்தன் வண்டியில் அரசனால் சிறை வைக்கப்பட்டுத் தப்பிய ஆரியகன் யாருக்கும் தெரியாமல் ஏறிச்செல்கிறான்) சகாரன் தோட்டத்திற்கு வண்டி வந்ததும் வசந்த சேனை பிழை நேர்ந்ததை உணர்கிறாள்; வேதனைப்படுகிறாள்; சிறிது நேரத்தில் சகாரன் பார்வையில் படுகிறாள். சகாரன் வசந்த சேனையின் 'நல்லடி பொருந்தி ஈயென இரக்கிறான்-காதலை அவளோ, ஈயேன்” என்று மறுக்கிறாள்; புருவத்தை நெரிக்கிறாள். உடனே, சகாரன் வசந்தசேனையின் கழுத்தை நெரிக்கிறான். அவள் உயிர்ப்பற்று நிலத்தில் வீழ்கிறாள். சகாரன், அவள் உடலைச் சருகுகளால் மூடி மறைத்துவிட்டு நீதிமன்றம் சென்று சாருதத்தன் மீது சொலைக்குற்றத்தைச் சுமத்து