பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - மண்ணியல் சிறுதேர் கிறான். வழக்கு நடக்கிறது. சூழ்நிலை சாருதத்தனைக் குற்றவாளியாக்குகிறது. நீதிபதி அரசன் ஆணைக்கிணங்கிச் சாருதத்தனைக் கழுவேற்றும்படிக் கட்டளையிடுகிறான். தண்டனை நிறைவேறுமுன் மூர்ச்சையுற்றுக் கிடந்த வசந்தசேனை (அவளால் சூதர்களிடமிருந்து முன்பு காப்பாற்றப்பட்ட) பெளத்தத் துறவி சம்வாககனால் காப்பாற்றப்பட்டு அழைத்து வரப்படுகிறாள். இதற் கிடையில் சாருதத்தன் வண்டியில் ஏறி அவனிடம் அடைக்கலமாகி ஆதரவு பெற்ற ஆரியகன் பாலகனைக் கொன்று அரசன் ஆகிறான். அவன் செங்கோல் முதன்முதலாகச் சாருதத்தனுக்கு அருள் பாலிக்கிறது. சாருதத்தன் காப்பாற்றப்படுகிறான். வசந்தசேனையிடம் காதற் பிச்சை கேட்ட சகாரன்சாருதத்தனிடம் உயிர்ப்பிச்சை கேட்கிறான்; பெறுகிறான். இறுதியில் வசந்த சேனையும் சாருதத்தனும் ஒன்றாகிறார்கள்; பகாப்பதமாகிறார்கள். கதையைக் கண்டோம். இனி, கதையைத் தழுவிய நாடக அமைப்பைக் காண்போம். முதல் அங்கத்தில் சாருதத்தனும் வசந்த சேனையும் சந்திக்கிறார்கள். ஆனால் இது முதற்சந்திப்பு அல்ல. ஏற்கனவே காமதேவாயதனம் என்னும் பூஞ்சோலையில் இருவரும் சந்தித்திருக்கிறார்கள்; இதயங் கலந்திருக் கிறார்கள். இப்போது முதல் அங்கத்தில் இவ்விரண்டாம் சந்திப்பில் - காதல் தோற்றத்தைக் காட்டவேண்டிய தில்லையல்லவா? ஆதலால் காதல் வளர்ச்சி காட்டப் படுகிறது. முதல் அங்கத்தில் மட்டுமின்றி முதல் ஐந்து அங்கம் வரை இக்காதல் வளர்ச்சியே காட்டப்படுகிறது. சுருங்கச் சொன்னால் நாடகத்தின் செம்பாதி இதற்காகச்