பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 45 வில்லை. ஹர்சரின் நாகானந்தம் என்னும் நாடகத்தில், உச்ச நிலையில் சாகும் கதைத் தலைவன் (Hero) சிறிது நேரத்தில் தெய்வத்தின் அருளால் உயிர்பெற்று எழுவதாகப் படைக்கப்பட்டுள்ள முறையிலிருந்து வட மொழியில் எந்த நாடகமும் துன்பியலாக முடிவதில்லை என்றுணரலாம். f பண்டைய கிரேக்கரும் பிற்கால ஐரோப்பியரும் துன்பியலை ஏற்றனர். அவர்கள், நாடகத் தலைமக்கள்பால் அனுதாபங் கொள்ளத்தக்க விதத்தில் துன்பியல் நாடகங்கள் படைக்கப்படுமானால் மனித உள்ளங்கள் பண்படும், புனிதமடையும் என்று கருதி ஏற்றதாகத் தெரிகிறது. துன்பம் மனத்தை வெளுக்கும், தூய்மைப் படுத்தும் என்பது இந்திய நாட்டார்க்குத் தெரியாததல்ல. தெரியாதிருந்தால் சீதையின் அசோகவன வாசமும் பாண்டவர் வனவாசமும் இவ்வளவு காலம் அவர்களைக் கவர்ந்திருக்க முடியுமா? எனவே, புடமிட்டுச் சுடச்சுட ஒளிரும் பொன்னைப்போல் மனிதனை மாற்றும் துன்பத்தை ஒரு சுவை என்ற அளவில் இந்திய நாட்டார். குறிப்பாக வடமொழியாளர்-ஏற்றுக்கொண்டனர். நாடகம் அல்லது காவியத்தின் இடையே துன்பச்சுவை மற்ற சுவைகளைக்காட்டிலும் விஞ்சி நிற்கக்கூட அனுமதித் தார்கள். ஆனால் முடிவு மட்டும் துன்பமாக அமைவதை

  • Even the Nagananda of Sri Harsha in which, near the close of the drama, the hero expires on the stage, is made to change its course abruptly by the appearance of Gauri, who restoresther hero to life, and thus the play is brought to a happy conclusion.

—P. V. Ramanujaswami, Introduction to his Edition Ratnavali. P.9.