பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 'தமிழ் உயர்மொழி; தனிமொழி; செம்மொழி; எல்லாப் பொருளும் இதன்பால் உள; இல்லாத எப் பொருளும் இல்லை' - தமிழின், அருமை பெருமைகளை இப்படி அறிஞர் பலரும் கூறுவர். ஆனால், இவ்வனைத்தும் தமிழுக்குத் தான்தோன்றியாய்' முளைத்தவை அல்ல. மரபுவழி வந்த புலவர் பலர் உரமேற்றி வளர்த்ததின் விளைவே அவை. வளர்த்த நெறிகளுள், மொழிபெயர்த்து யாத்தல்' என்பதொன்று. அவ்வழிபற்றி எழுந்த விழுமிய நூலே பண்டிதமணியின் 'மண்ணியல் சிறுதேர்' இம், மண்ணியல் சிறுதேர் - முதுபெரும்புலவரின் ஆழ்ந்தகன்ற புலமைக்கும் தனித்துயர்ந்த திறமைக்கும் உறுபெரும் சான்று. பொருட்செறிவுடைய உரைநடைப் பகுதிகள், பழமரபு வழுவாது தழுவிய பாவகைகள், கருத்தாழம் மிக்க அடிக்குறிப்புக்கள் - இவைபோன்ற தனிச் சிறப்புக்கள் பலவுண்டு. சிறந்ததொன்றைக் கற்றவர் மட்டும் புகழுதல் போதாது. மற்றவரும், படித்து மகிழ வழிகோலவேண்டும். மதுரைப் பல்கலைக்கழகம், இதனைப் பட்டப்படிப்புப் பாடம் ஆக்கியுள்ளது நல்லது. எனினும், அரிய நூலியல்பால் பயில்வார் நேர்முகமாக எடுத்துப் படிக்கமுடிவதில்லை. கற்போருக்கு, அருமை 3