பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மண்ணியல் சிறுதேர் முன்னுள்ள பாகமும் விளைவு ஆகும். பத்தாம் அங்கத்தின் எஞ்சிய பாகம் துய்த்தல் ஆகும்.' இனி, அங்கம் அங்கமாகத் துய்ப்போம். 2. நாடகச் சிறப்பு முன்னுரை 'எடுத்துக்கொண்ட இலக்கியம் இனிது முடிதற் பொருட்டு வாழ்த்துக் கூறுவர், வையத்துப் பெரும் புலவர். சேரன் தம்பியின் சிலம்பில் திங்களும் ஞாயிறும் தேன்.மழையும் வாழ்த்தப்படுகின்றன. கம்பனால் 'அலகிலா விளையாட்டுடையார் வாழ்த்தப்படுகின்றார். வடமொழியில் காவியங்களில் மட்டுமின்றி நாடகங் களிலும் வாழ்த்துக் கூறும் மரபைக் காணலாம். காளிதாசன் சாகுந்தல நாடகத்தில் சிவபெருமானை வாழ்த்துவதைப் போலவே சூத்திரகனும் சிவபெருமானை வாழ்த்தி வழிபட்டு மண்ணியல் சிறுதேரை இயக்குகிறார். 'சங்கரன் மேற்கொள் சமாதி எங்ங்ணும் நும்மை இனிதுகாத் தருள்கவே' என்று முதற்செய்யுள் முடிகிறது. இச்செய்யுள் நாடகக் கருப்பொருளைக் குறிப்பாகத் தெரிவிக்கின்றது. சங்கரன் t அணிந்துரை, மண்ணியல் சிறுதேர், ப. 19.