பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு - 莎凰 என்னுஞ் சொல் இன்பத்தைச்செய்பவன் என்னும் பொருள தாகலின், அது வசந்தசேனையைக் குறிப்பிடுகிறது. சமாதி' என்பது உள்ளத்து நிகழும் அவளது காதலைப் (சாருதத்தன் பால் கொண்ட காதலை) புலப்படுத்துகிறது. இரண்டாம் செய்யுளில், உமாதேவியார் மின்னல் போன்ற கரங்களால் நீலகண்டனாரின் நீருண்ட மேகம் போன்ற கண்டத்தைத் தழுவினார் என்று கூறப்படுகிறது. இங்கும், மேகத்தைப்போல இரப்போரது வறுமையைப் போக்கும் பண்புள்ள சாருதத்தனை மின்னலையொத்த வசந்தசேனை தழுவ விழைகிறாள் என்னும் நாடகக் கருப்பொருளைக் கண்டுகொள்ளலாம். மேகத்தால் இருட்டும் மின்னலால் வெளிச்சமும் வானில் வருவதைப் போல், தீமையும் நன்மையும் வாழ்வில் மாறிமாறி வரும் என்றும் இந்நாடகத்தில் தீமைக்கும் நன்மைக்குமிடையே போராட்டம் நிகழும் என்றும் இறுதியில் நன்மை வெல்லும் என்றும் கருதத்தக்க விதத்தில் இரண்டாம் செய்யுள் அமைந்துள்ளது. மேலும், தான் நஞ்சையுண்டு தேவர்களை மகிழச்செய்த நீலகண்டன் எத்தனை கோடித் துன்பம் நேர்ந்தாலும் அவற்றைத் துடைத்து இறுதியில் சாருதத்தன், வசந்தசேனை போன்ற நன்மக்கள் மனமகிழத் துணை நிற்பான் என்றும் குறிப்பும் உள்ளது. இத்தகைய குறிப்புத்திறன் (Suggestiveness) நாடகப் போக்கினைச் சுவைபடச் சுட்டிச் செல்கிறது. 'நாந்தி என்னும் வாழ்த்து முடிந்ததும் முன்னுரை தொடங்குகிறது. வடமொழி நாடகங்களின் முன்னுரை யில் முதன் முதலில் சூத்திரதாரன் (Stage Manager)