பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5డ్ల -- மண்ணியல் சிறுதேர் படுத்துகிறான். அவன்கூற்றிலிருந்து பின்னால் அறிவுக்குச் சத்துருவான ஆத்திரத்தால் பாலகன் அழிவான் போலும் என்று எண்ணுகிறோம். சூத்திரதாரன், தன் போன்ற ஏழை அந்தணனுடன் விருந்துண்ண இன்னொரு ஏழை அந்தணனைத் தேடும்போது 'சாருதத்தருடைய நண்பராகிய மைத்திரேயர் இதோ வருகின்றார். என்கிறான். இதிலிருந்து நாடகத் தொடக்கத்திலேய்ே சாருதத்தன் வறுமையின் மடித்தலத்தில் இருக்கிறான் என்று அறிகிறோம். இவ்வாறு, பழைய கிரேக்க நாடகங்களைப் போலவும், ஏனைய வடமொழி நாடகங்களைப் போலவும் மண்ணியல் சிறுதேர் முன்னுரை பெற்றுள்ளது; புதிய ஐரோப்பிய நாடகங்களின் (pāj stiläuffsir àptianu (The Importance of the Opening Scene) அம்முன்னுரை பெற்றுள்ளது. 1 அணிகலன் அடைக்கலம் சேக்ஸ்பியர் நாடகங்களிலும் இக்கால நாடகங்களிலும் ஒர் அங்கம் (Act) பல காட்சிகளாக அல்லது களங்களாகப் (Scenes) பகுக்கப்பட்டிருத்தலைப்போல் வடமொழி f இராமன்மணிமுடிபுனையப்போகிறான் என்றறிந்து பொறாமையால் மனமும் குறுகிய கூனியின் தோற்றத்தின்மூலம் பின்னால் வரவிருக்கும் இராவணனையும் காட்டி நிற்கும் கம்ப நாடகம் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது: - 'இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல் துன்னரும் கொடுமனக் கூனி தோன்றினாள்' --மந்தரை சூழ்ச்சிப் படலம்.