பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 . மண்ணியல் சிறுதேர் பற்றி ஏமாற்றம் அடைவதற்கும் ஏற்ற விதத்தில் இருண்ட அந்தி நேரத்தில் முதல் அங்கக் காட்சிகளை அமைத்துள்ள திறன் பாராட்டத்தக்கது. மதிநுட்பத்தோடு காட்சிகளை அமைக்கும் சூத்திரகன் முதல் அங்கத்தை மைத்திரேயனின் தனிமொழியோடு ஆரம்பிக்கிறார். மைத்திரேயனின் தனிமொழி சிறியதே. எனினும், அது நாடகத் தலைவனுடைய இப்போதைய ஏழ்மையையும் பழைய பெருவாழ்வையும் படம் பிடித்துக் காட்டுகிறது. ஒருகாலத்தில் (சாருதத்தனுடைய செல்வத்தால்) இரவும் பகலும் ஊரேறுபோல்’ வாயசைத்துக் கொண்டிருந்த மைத்திரேயன் இப்போது 'மாடப் புறாப்போல் எவ்விடத்துந்திரிந்து படுத்துறங்குவ தற்கு மட்டும் சாருதத்தன் இல்லம் வரும் அவல நிலை அத்தனிமொழியில் வெளிப்படுகிறது. முதல் அங்கத்திலேயே சாருதத்தன், வசந்த சேனை, சகாரன், மைத்திரேயன் போன்ற நாடகத் தலைமாந்தரும் (Major Characters) விடன், சேடன், இரதணிகை போன்ற சிலரும் (Minor Characters) அறிமுகப்படுத்தப்படு கின்றனர். சாருதத்தனுடைய பெருமையை மைத்திரே யனும் விடனும் வியந்துரைக்கின்றனர். 'அவர் உயர் குணங்களால் உச்சயினி நகரம் அலங்கரிக்கப்பட வில்லையா?" என்று சகாரனை நோக்கிக் கேட்கிறான் மைத்திரேயன். சாருதத்தன், 'நண்ணு நீள்வெயிற் காலத்தில் நல்லநீர்த் தடம்போல் உண்ணும் வேட்கையை மக்களுக்கு ஒழித்தலான் உலர்ந்தான்' என்றும் அவன் குணங்களுக்கு அஞ்சுகிறேன்' என்றும் விடன் சகாரனை நோக்கிக் கூறுகிறான். எனினும்