பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மண்ணியல் சிறுதேர் யுண்டாகும்' என்று சகாரன் வாயிற் பிறந்த நஞ்சினும் கொடிய வார்த்தைகளை மைத்திரேயன் சாருதத்தனிடம் அப்படியே கூறுகிறான். அதனை அறிவில் ஆதவனாகிய சாருதத்தன் பொருட்படுத்தாமல் சகாரனை ‘அறிவிலா தவன்' என்கிறான். இந்த அறிவிலாதவன் சாருதத்தன் வாழ்வில் எத்துணைத் தொல்லையை உண்டாக்கப் போகிறான் என்பதைப் பின்னால் பார்க்கப்போகிறோம். வசந்தசேனை சாருதத்தனிடம் அணிகலனை அடைக்கல மாக்கும் இவ்வங்கத்தில் 'வசந்த சேனையின் காதல் சகாரனாலேயே முதன் முதலில் அறிவிக்கபடுவதும், அவனே சாருதத்தனின் இல்லத்தை வசந்தசேனை அறியுமாறு சுட்டிக்காட்டுவதும், அவனே சாருதத்தனுக்கு ஆணை பிறப்பிக்கும் வாயிலாக வசந்தசேனை அவன்பாற் காதல் கொண்டமையை அவனுக்கு அறிவிக்கச் செய்வதும், அவ்வறிவிப்பை வசந்தசேனை கேட்பதும் ஆசிரியரின் திறமைக்குச் சான்றுகள் ஆகும்." மேலும், சூத்திரகன், சகாரனின் விகாரமான தெரு விளையாடல்களையும் சகாரன்-விதூடகன் உரையாடல் களையும் ஐம்பதுக்கு மேற்பட்ட பாடல்களையும்'பசிப் பிணி என்னும் பாவி பற்றிய அழகிய வருணனைகளையும் இனிய உவமைகளையும் படைத்துக் காட்டியதோடு தீவினைக்குக் காரணமாகும் அணிகலனையும் அறிமுகப் படுத்தி முதல் அங்கத்தை முதன்மையான அங்கமாக(Afirst rate act) விளங்கச் செய்துள்ளார். f பேராசிரியர். சுப. அண்ணாமலை, மண்ணியல் சிறுதேர். - உரைநூல், ப.87.