பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எளிமையாக வேண்டும்; பெருமை, இனிமையாக வேண்டும். இங்ங்னம் மாற இருமையும் விரவிய துணை நூல் ஒன்று தேவை. இத்தேவையறிந்த ஆசிரியர் ஒருவரின் வெளியீடே இம்மதிப்பீடு. ஆசிரியர் மீ. இராசேந்திரன் எம்.ஏ. எங்கள் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர். ஆங்கிலத்தோடு அருந்தமிழைப் பாங்குறப் பயின்றவர். பாட்டு, பேச்சு, எழுத்து என்ற முத்துறையிலும் வல்ல வித்தகர். நாடும் நகரும் நன்கறிந்த இளங்கவிஞர். இந்நாடகத்தைப் பாடம் நடத்தும் பொறுப்பேற்றவர். நடத்திய போக்கும் குறிப்பெழுதி யுதவிய பாங்கும் என் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. இத்தனையும் புத்தகமாகி நிலைத்த பலன்தர வேண்டினேன். உடனடியாய் இசைந்த அவரது பணிவுக்கு நன்றி. முயன்று நிறைவேற்றிய பணிக்கு மகிழ்ச்சி. தகுதிமிகுதி உடைய இவரது மதிப்பீடு சிறந்திருப்பதில் வியப்பில்லை. இம்மதிப்பீடு, புறம், அகம், அகப்புறம் என முப் பிரிவுடையது. புறவுரை மூலம் ஆசிரியர் வரலாறு மாசின்றித் தெரியும்; வாழ்ந்திருந்த காலம் புரியும்; நூலின் புகழ்மணம் வீசிக்கமழும்; பண்டிதமணியார் கலைவாழ்வு துலங்கும். அகநிலைப் பகுதியோ, கதைச்சுருக்கம் தரும்; பத்தங்கத் தலைப்பும் தனித்தனி தாங்கும். மேடைப்பகுப்பு முறை, காட்சியமைப்பு நயம், இருவருரையாடல்கள், ஒருவர் தனிமொழி, நாடகக்குறிப்பு, பாத்திர அறிமுகம், கதையின் வளர்ச்சி-என்ற இவைகளை மறவாது நினைப் பூட்டும். இனி, உறுப்பினர் அனைவரையும் இனம் தெரிய வைப்பது 'அகப்புறம்' பகுதி. இதன்கண் நாடக மாந்தரின் குணநலன்கள் இடம்பெறும். அவரது, உள்ளம், உரை, 4