பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மண்ணியல் சிறுதேர் சூதில் தோற்றமையால் தரவேண்டிய பத்துப் பொற்காசின் நிமித்தம் சூதுகளத் தலைவன் மாதுரனுக்கும் மற்றொரு சூதனுக்கும் அஞ்சிய சம்வாககன் பாழ்ங்கோயிலில் ஒளிந்திருக்கும்போது அகப்படுகிறான்; பின்னர் தருத்துரகன் என்போன் உதவியால் தப்பி வசந்தசேனை யிடம் அடைக்கலம் புகுகிறான்; தான் பரம்பர்ைச் சூதன் அல்லன் என்கிறான். உச்சயினி நகரத்தின் பெருந்தகை ஒருவனின் பணியாளனாய்த் திானிருந்ததாகவும் அவன் கை' களைத்துவிட்டதால் இன்று தன் கை சூதில் திளைத்து விட்டதாகவும் உரைத்து அப்பெருந்தகையின் பண்புகளை அடுக்கி இறுதியில் அவன் பெயரையும் இயம்புகிறான்; "சாருதத்தன்' என்கிறான். அவ்வளவுதான்! வசந்தசேனை 'ஐய! இவ்வில்லம் தங்களுடையதே' என்றுரைத்துத் தன் உள்ளத்தில் மகிழ்ச்சிப் பெருக்கை உண்டாக்கிய சம்வாககனுக்கு இருக்கை அளிக்கிறாள்; அவன் பட்ட கடனைத் தீர்க்கத் தன் திருக்கை வளையலைக் கழற்றிக் கொடுக்கிறாள். கை வளையலைத் தந்து தன்னைக் காப்பாற்றிய நங்கைக்கு 'எங்ங்னம் கைம்மாறு செய்வேன்?' என்று சம்வாககன் தனக்குள் கேட்கிறான். பின்னர், 'சம்வாககனாகிய சூதன் பெளத்த சந்நியாசியாயினான்' என்று வசந்தசேனையிடம் சூளுரைத்துச் செல்கிறான். இவ்வார்த்தைகளில் உள்ள நாடகக் குறிப்பை இப்போது புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் பின்னால் (எட்டாம் அங்கம்) புரிந்துகொள்வோம்; அப்போது சூத்திரகனின் பாத்திரப் படைப்புத்திறன் கண்டு வியப்போம். சம்வாககன், பெளத்தத்துறவியாகிச்சென்ற பிறகு கன்ன பூரகன் என்னும் வசந்தசேனையின் பணியாளன் வருகிறான், துறவி ஒருவனைக் கொல்ல முயன்ற தறிமுறி