பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு - 63 தென்படுகிறது. இந்தக் கலையை அவன் எவ்வளவு காலம் பயின்றானோ? முருகப்பிரான்தான் களவு நூலாக்கிய முதலாசிரியராம். எனவே 'முருகப்பிரானுக்கு வணக்கம் தெரிவிக்கிறான் இன்னும் தன்னுடைய கலை ஞானத்துக்குக் காரணமான ஆசிரியர்க்கெல்லாம் வணக்கம் தெரிவிக்கிறான். பின்னர், தன் 'கை வண்ணத்தைப் போற்றிக் கொண்டே சாருதத்தன் வீட்டில் செல்வம் இருக்கிறதா இல்லையா என்று அறிய வித்துக் களை மந்திரித்து இறைக்கிறான். 'வித்துக்கள் ஓரிடத்தில் திரண்டு சேராததால் இவ்விட்டில் ஒன்றுமில்லை என்று செல்லக் கருதுகிறான். மைத்திரேயன் அவ்வளவு எளிதாக அவனைச் செல்லவிடுவானா? கனவில் சாருதத்தனைக் கண்டு அவனிடம் அளிப்பதாக எண்ணிப் பொற்பணி முடிப்பை மைத்திரேயன் நீட்டுகிறான். அந்தணனது விருப்பத்தைத் தடுக்கக்கூடாது என்று வாங்கிக் கொள்கிறான், மற்றொரு அந்தணனாகிய சருவிலகன். “யானும் நம் பிராமண குலத்துக்கு இருள் உண்டாக்கி விட்டேன்' என்று இழிவு குறித்து வருந்தியவாறு செல்கிறான். கண்ணாடிக் கன்னம் கர்ட்டித்தன் இதயத்துள் கன்னம் வைத்துப் புகுந்த (வசந்தசேனையின் சேடி) மதணிகையை உரிமையாக்கவே சருவிலகன் சாருதத்தன் வீட்டில் கன்னம் வைத்திருக்கிறான். (இதை அவன் தனிமொழி புலப்படுத்துகிறது.) மதனிகை சருவிலகன் உள்ளத்தைக் களவாடினாள்; சருவிலகனோ சாருதத்தன் வீட்டில் உள்ளதைக் களவாடுகிறான்; சரிதானே...! சருவிலகன், சாருதத்தன் வீட்டைவிட்டுப் போவதைக் கண்ட மதனிகை மைத்திரேயனை எழுப்புகிறாள்; கன்னத் துளையைக் காட்டுகிறாள். மைத்திரேயனால் என்ன செய்ய முடியும்? உடனே அவன் சாருதத்தனை எழுப்புகிறான்;