பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மண்ணியல் சிறுதேர் கன்னத்துளையைக் காட்டுகிறான். கண்டதும் சாருதத்தன் வருந்துகிறான். எதற்காக தன் வீட்டுக்கு வந்த 'விருந்தினன் வெறுங்கையோடு சென்றிருப்பானே என்பதற்காக மைத்திரேயன் வருந்தவிடுவானா? அவ் விருந்தினன் பொற்பணியைக் கொண்டு சென்றதை உணர்த்துகிறான். சாருதத்தன் மகிழ்கிறான் - கள்வன் பயன் எய்தினான்’ என்று. ஆனால் அப்பொற்பணி வசந்த சேனையின் அடைக்கலப்பொருள் என்று மைத்திரே யனால் நினைவூட்டப்பட்டதும் மீண்டும் வருந்துகிறான். மைத்திரேயனுக்கோ எதைப்பற்றியும் கவலையில்லை. 'பொற்பணியை யாரும் தரவுமில்லை; பெறவுமில்லை. என்று மறுத்துவிடலாம் என்கிறான், அந்த உலகியல் மேதை விதுளடகனாயிருந்தால் சாருதத்தனும் அப்படிச் செய்யலாம். அவனோ தலைவன்; 'மாட்சிமிக்க தலைவன். எனவே, பழிக்கு நாணுகிறான்; பொய்யுரைக்க நானுகிறான். - சாருதத்தனுடைய உடல் தீங்குற்றாலும் ஒழுக்கம் கெடக்கூடாது' என்று கருதி மைத்திரேயன் மூலம் தன்னிடத்தில் எஞ்சியுள்ள (தாய் வீட்டுப் பரிசான) ஒரே இரத்தினமாலையைக் கொடுத்தனுப்புகிறாள், அவன் இல்லாள்துதை. தன் மனைவியிடமிருந்து பெறவேண்டிய நிலைக்கு வருந்தும் சாருதத்தன் பின்னர் ஒருவாறு ஆறுதல் அடைந்து வசந்தசேனையிடம் பொற்பணிக்குப் பதிலாக இரத்தினமாலையைச் சேர்க்க மைத்திரேயனை அனுப்புகிறான். இரத்தினமாலை வசந்தசேனையின் அணிகலனைக் காட்டிலும் உயர்ந்தது என்கிறான் மைத்தி ரேயன். சாருதத்தன் வசந்தசேனையின் விலையிலாஉறுதி யன்பிற்கே இரத்தினமாலையை அளிப்பதாகக் கூறுகிறான். ஒருவேளை மைத்திரேயன், தூதையை இரத்தினமாலையாகவும் வசந்தசேனையை அணிகல