பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 67 போன்றவர் என்கிறான்; பெண் இனத்தையே பழிக்கிறான். பின்னர், சாருதத்தன், வசந்தசேனையின் காதலன் என்றறிந்து வருந்துகிறான். மதனிகையின் இயற்கை யறிவைப் போற்றி அவள் வார்த்தைக்கிணங்கி சாருதத்தனின் தூதனாக நடித்துப் பொற்பணியை வசந்த சேனையிடம் சேர்க்கிறான். வசந்தசேனையும் ஒன்றும் தெரியாதவளைப் போல் நடிக்கிறாள். மதணிகையைச் சருவிலகனுக்கு அளிக்கிறாள். இருவரும் வசந்த சேனையை வணங்கிச் செல்லும்போது ஆரியகன் சிறைப் பட்ட செய்தி அறிவிக்கப்படுகிறது. உடனே, இயைந்த நண்பனே பெண்பலர் தம்மினும் பெரியின் என்று ஆரியகனை மீட்கப் புறப்படுகிறான் சருவிலகன். இனி, சருவிலகனுக்கு நாடகத்தின் இறுதியில்தான் வேலை யிருக்கிறது, நிரம்பl' சருவிலகன் சென்றதும் மைத்திரேயன் வருகிறான்; எட்டுக்கட்டாகப் பிரிக்கப்பட்டுள்ள வசந்தசேனையின் வீட்டையும் செல்வச் செழிப்பையும் கண்டு வியக்கிறான்; நெடிதாய் வருணிக்கிறான். மைத்திரேயனின் வருணனை அல்லது புனைவுரை(Description) நாடகத்தின் வேகத்தைக் குறைத்துச் சோர்வளிக்கிறது என்பது உண்மையே. அச்சோர்வைப் போக்கவே வசந்தசேனையின் உடன்பிறப் பாளனையும் தாயையும் மைத்திரேயன் பரிகாசம்' செய்வதாகப் படைக்கிறார் ஆசிரியர். பின்னர், உபவனத்தில் இருக்கும் வசந்தசேனையை மைத்திரேயன் சந்திக்கிறான். 'யான்சூதில் அதனை (பொற்பணி முடிப்பை) இழந்துவிட்டேன்... இவ்விரத்தினமாலையை ஏற்றுக்கொள்ளல் வேண்டும்' என்று சாருதத்தன் சொன்னதாகச் சொல்லி இரத்தினமாலையைக் கொடுக் கிறான். இந்த இடத்தில் நாம் கொஞ்சம் நின்று கவனித்துச் செல்ல வேண்டியிருக்கிறது.