பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மண்ணியல் சிறுதேர் மிருச்சகடிகத்தின் மூலநூலாகிய சாருதத்தத்தில்: மைத்திரேயன் வசந்தசேனையைக் கண்டு சென்றபின் சருவிலகன்சந்திக்கிறான் என்றுள்ள காட்சியைச் சூத்திரகன் மாற்றியுள்ளார். சருவிலகன் பொற்பணியைக் கொடுத்துச் சென்றபின் மைத்திரேயன் வசந்த சேனையைச் சந்திப்ப தாகக் காட்சியை அமைத்துள்ளார்; இந்த மாற்றம் எதற்காக? 'ஜூலியஸ் சீசர் நாடகத்தில் சீசர் சாவுக்குப் பிறகு சின்னா என்னும் கவிஞன் உரோம் நாட்டு மக்கட் கும்பலால் (Mob) கொல்லப்படுவதாக ஒரு காட்சியுள்ளது. இது, புளுடார்க்கிடமிருந்து சேக்ஸ்பியர் கடன் வாங்கியது தான். எனினும், சேக்ஸ்பியர் தன் நோக்கத்தைப் புலப்படுத்தும் விதத்தில் இக்காட்சியை அமைத்துள்ளார். சீசரைக் கொன்ற சதிகாரர்களுள் ஒருவன்சின்னா என்பவன். அதே பெயருடைய மற்றொருவனைக் - கவிஞனைச் சதிகாரன் சின்னா என்று தவறாகக் கருதி அறியாமல் கொன்றுவிடுகிறது உரோம் நாட்டுக் கும்பல் என்று சித்திரித்துள்ளார் புளுடார்க். சரியாகத் தெரிந்தே, வேண்டுமென்றே அக்கும்பல் கொல்வதாகக் காட்டுகிறார் சேக்ஸ்பியர். உரோம் நாட்டு மக்கட் கும்பலில் சிக்கிய சின்னா எவ்வளவோ கெஞ்சுகிறான். 'நான் கவிஞன் சின்னா" என்கிறான்; 'சதிகாரனான சின்னாநான் அல்லன்' என்கிறான். ஆனால் "அதைப் பற்றிக் கவலையில்லை; அவன் பெயர் சின்னா: அவன் இதயத்திலிருந்து அவன். பெயரைப் பறித்தெறியுங்கள்; பின்னர் அவனைப் போகவிடுங்கள் என்கிறான்கும்பலில் ஒருவன். பின்னர்

  • Cin: I am not Cinna the Conspirator. Fourthcitizen: It is no matter, his name's Cinna; pluck but his

name out of his heart, and turn him going. -- Julius Caesar (III.iii.)