பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயல்கள் தெளிவுபடும். இடையிடையே மூலவுரை நடைமேற்கோள்கள் வரும். சுவைதரும் கவிதையடிகளும் ஒளித்து முகம் காட்டும். கற்பவருக்கு மட்டும் இன்றிக் கற்றோருக்கும் களிப்பளிக்கும் துறைகள் பல. தந்தை யார் என்ற பகுதியி னாய்வும் காலவரையறை முடிவும் இவரது 'நடுநிலை யுள்ளம்' காட்டும். சகாரன் குணநலம் பன்முறையும் படித்தின்புறத்தக்கது. நகைச்சுவை ததும்ப நேருரையாடல் போல் செல்கிறது. பக்கம் தோறும் தரும் அடிக்குறிப்புக்கள் இவரது பன்னூற்பயிற்சியை உறுதிசெய்கின்றன. படித் துண்ரத் தக்க நாடகத்தைக் கண்டு மகிழ்வதுபோல நடைநயம் காட்டுகிறது. சுருக்கச் சொல்லலும் விளங்க வைத்தலும் இவரது உரைநடையின் சிறப்பியல்புகள். சாகுந்தலத்தோடு, இந்நூலை ஒப்பிடுவதும், ஒற்றுமை வேற்றுமை காட்டுவதும், உரியகாரணம் காட்டி மதிப்பீடு செய்வதும்-இவரது ஒப்புநோக்கி உணரும் திறத்திற்குப் பெரியசான்று. இந்நாடகம், துன்பியல் முடிவினை அடையாதது ஏன்? என்ற தடைக்கு விடை காண்பது, இந்நூலுக்குப் பாசனை ஆசானாக்குவது தகுமா? என்றுகேட்டு விடை யிறுப்பது, மைத்திரேயனுக்கு முன் வசந்தசேனையைச் சருவிலகன் சந்திப்பது எதற்கு என்று போதிய அமைதி காட்டுவது, சாருதத்தனுக்கு நாடகத் தலைமையில்லை என்போர் கூற்றை மறுப்பது-போன்ற, புலமை சான்ற பகுதிகள் நனிமிகச் சிறந்தவை. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கே கருத்தோட்டத்தில் எதிர்நீந்த முடியும். 'நாடகத்தின் பெயர்ப் பொருத்தம் காட்டுமழகு திருத்த மிக்கது. ஆறாம் அங்கமே நாடகத்துக்கு உயிர்நிலை' என