பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 69 அவனைப் போகவிடுகிறார்கள்... எங்கே? இறுதியில் எல்லாரும் போகவேண்டிய இடத்திற்கு இப்படி உரோம் நாட்டு மக்கட்கும்பலின் முட்டாள்தனத்தையும் முரட்டுக் குணத்தையும் நம் கண்முன் நிறுத்தவே சேக்ஸ்பியர் இந்த மாற்றத்தைச் செய்துள்ளார். சூத்திரகனும், சாருதத்தனின் ஓங்கி உயர்ந்த பெருந்தன்மையைக் காட்டவும், வசந்தசேனையின் இதய வீணையை இதற்குமேல் மீட்டமுடியாது என்பதைப் போல் மீட்டவுங் கருதியே மைத்திரேயன்-வசந்தசேனை சந்திப்பை இவ்வங்கத்தின் இறுதியில் அமைத்துள்ளார். சாருதத்தன், பொற்பணி களவு போய்விட்டது என்று சொன்னால் போதும்: வசந்தசேனை திரும்பக் கேட்க மாட்டாள். 'இவ்வில்லம் அடைக்கலப் பொருள் வைப்பதற்கு உரியதன்று' (1) என்று தான் முன்னமே சொன்னதை நினைவுறுத்தினால் போதும்; வசந்தசேனை நிச்சயம் கேட்கமாட்டாள். ஆனால் 'சிறுவிலையுடை யதும் கள்வனாற் கவரப்பட்டதுமாகிய அணிகலத்தின் பொருட்டு கடல்வலயத்திற் சிறந்த இரத்தினமாலையைக்' கொடுத்தனுப்புகிறான். இவ்வளவு போதாதென்று தன்னைச் 'சூதனாக்கிக் கொள்கிறான். களவில் இழந்ததாகச் சொன்னால் வசந்தசேனை இரத்தின மாலையைப் பெற்றுக்கொள்ளமாட்டாள்; சூதில் இழந்த தாகச் சொன்னால்தான் பெறுவாள் என்று எண்ணிப் பொய் சொல்கிறான். பொய்யா? இல்லை... இதுதான் மிகப் பெரிய வாய்மை இந்த வாய்மையே வெல்லும் ஆம் சாருதத்தனின் வாய்மை வசந்த சேனையை வெல்கிறது; உரிமையாக்குகிறது. 'கயவனாற் கவரப்பட்டும் பெருந் தன்மையால் சூதில் இழக்கப்பட்டதென்று கூறுகின்றார். இதனாலேயே விருப்பஞ் செய்கிறேன் என்கிறாள்.