பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - மண்ணியல் சிறுதேர் மையிருள் செய்தும் மாமழை பெய்தும் தடைப்படுத்தும் அகாலத்தில் சாருதத்தனைக் காணப் புறப்படுகிறாள். இவ்வங்கத்தின் தொடக்கத்தில் சருவிலகன் பேறு பெற்றான். இதோ, வசந்தசேனை புறப்பட்டுவிட்டாள்; சாருதத்தன் பெரும்பேறு பெறப் போகிறான். V புயல் மறைப்பு 'உலகம் பொல்லாதது; அவர்கள் நல்லவர்களாக யிருந்தாலும் உலகம் பொல்லாதது' என்றோ படித்த ஒரு தமிழ்ப் புதினத்தில் (நாவல்) உள்ள இந்த முதல் வாசகம் இப்போது நினைவுக்கு வருகிறது. சாருதத்தனும் வசந்தசேனையும் நல்லவர்கள். ஆனால் உலகம்? பகட்டுக் காட்டுகிறது; பயமுறுத்துகிறது; ஆர்ப்பாட்டம் செய்கிறது. இவற்றையெல்லாம் பொருட் படுத்தாமல பண்பு” என்னும் விழுச்செல்வத்தின் முதல்வனாகிய சாருதத்தனும் பண்பைப் பாராட்டி மனம் பறிகொடுப்பதில் முதல்வியாகிய வசந்தசேனையும் பித்தும் பேதைமையும் பிடித்த உலகத்தினிடையே இணை கிறார்கள்: இதைத்தான் இந்த அங்கம் காட்டுகிறது. மழை,

  • The man with no means is now the richest, richest in character; the woman with no status is now the noblest in her appreciation of nobility; and (Act V) in the midst of the mad world protesting, flashing, threatening and thundering the two are united.

-- R.V. Jagirdar, Drama in Sanskrit Literature. P. 107.