பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 7լ மின்னல், இடி, இருள் - இவை மூட உலகத்தின் எதிர்ப்புகள்! இன்னல்கள் தடைகள் அச்சுறுத்தல்கள்! "மங்குல் பொழிக உறுமுக மாவசனி இங்கு விடுக இவற்றாலென்?" என்று துணிவோடு சாருதத்தனைச் சந்தித்துக் காதலித்துப் பிரியாதிருக்க வசந்தசேனை வருகிறாள். 'வசந்தசேனை வருகிறாள்' என்று வீட்டுப் பூங்காவின் கண்வீற்றிருக்கும் சாருதத்தனிடம் முன்கூட்டியே மைத்தி ரேயன் சொல்கிறான். 'விலைமகளோ பாதகுறட்டினுட் புகுந்த சிறிய பரற்கற் போல மீண்டும் விலக்கத்தக்கவள்” என்று அறிவுறுத்துகிறான் - வசந்தசேனையைப் புரிந்து கொள்ளாமல்| 'வசந்தசேனை வருகிறாள் என்று கும்பீலகன் (வசந்த சேனையின் சேடன்) சாருதத்தனிடம் தெரிவிக் கிறான்; மேலாடையைப் பரிசிலாகப் பெறுகிறான். 'இரத்தினமாலை சிறுவிலையுடையது; பொற்பணி பெருவிலையுடையது' என்று கருதி மற்றொன்றைப் பெறுதற்கு வசந்தசேனை வருகிறாள் என்று மைத்திரேயன் மீண்டும் சாருதத்தனை எச்சரிக்கிறான். வசந்தசேனை வருகிறாள்; தாமரை நீங்கிய திருவைப் போல் அன்ன நடையிலும் ஒரு சின்ன நடை பயின்று வருகிறாள்.' வசந்தசேனை வருகிறாள்; சேடியும் விடனும் சூழ, சீறடிச் சிலம்பு பாட, மழையில் கூந்தல் நனைய மாணிக்கக் கொடியனைய வசந்தசேனை வருகிறாள். 'ஆ' வசந்த சேனை வந்துவிட்டாள்" என்று சாருதத்தன் உவக்கிறான்.