பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - மண்ணியல் சிறுதேர் மழைக்கால இரவில் அவள் வருகைக்குரிய காரணத்தை மைத்திரேயன்கேட்கிறான். வசந்தசேனைசாருதத்தனிடம் இரத்தினமாலையைச் சூதில் தோற்றுவிட்டாள்; அது கிடைக்கும் வரை இப்பொற்பணியை வைத்துக்கொள்ளல் வேண்டும் என்று (சருவிலகன், சாருதத்தன் வீட்டில் திருடிய) பொற்பணியைக் காட்டுகிறாள் சேடி. சாருதத் னுக்கு உண்மை புரிகிறது; அடித்த பந்து திரும்ப வருகிறது என்று தெரிகிறது. மகிழ்ச்சியோடு பொற்பணி கிடைத்த இனிய செய்தியைச் சொன்ன சேடியிடம் "இக்கணை யாழியைப் பெற்றுக்கொள் என்கிறான்; கையைப் பார்க்கிறான்; கணையாழியில்லாதது கண்டு நாணுகிறான். வசந்தசேனை இக்காட்சியைக் காணுகிறாள்; தனக்குள் “இதனாலன்றே விரும்பப்படுகின்றீர்கள்” என்கிறாள். பின்னர் "இவ்விரத்தினமாலையால் இவளை (தன்னை) நிறுத்துணர எண்ணியது தக்கதன்று' என்று கூறுகிறாள். சாருதத்தனோ புன்முறுவல் புரிந்தவாறு வறுமை பிறர் ஐயம் உறற்கு ஏதுவாம்’ என்றுரைக்கிறான். பின்னர் பொழியும் மேகங்களைப் பார்க்கிறான்; பாடுகிறான். 'வானத்தை மின்னல் தழுவுகிறது, பார் - தன் காதலனைத் தழுவும் காரிகையைப்போல் என்று வசந்தசேனைக்குக் காட்டுகிறான். இன்பச்சுவை தோன்ற அவள் அவனைத் தழுவுகிறாள். முன்னர் தடையாயிருந்த வானமும் மின்னலும் இப்போது உதவி புரிவதைக் கண்டு, ‘வாழ்க நூறாண்டு மகிழ்ந்து' என்று சாருதத்தன் வாழ்த்துகிறான். சாருதத்தனும் வசந்தசேனையும் வாழ்க நூறாண்டு மகிழ்ந்து என்று வாழ்த்த எண்ணுகிறோம் நாம்! இவ்வங்கத்தில் கும்பீலகனும் மைத்திரேயனும் உண்டாக்கும் நகைச்சுவையில் உள்ளங் களிக்கிறோம். வான மழையைப் பற்றிய கானமழையில் குளிக்கிறோம்.