பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு - 75 முகத்தையுடையனாய் என் இதயத்தை மிகவும் இன்புறுத்துகின்றான்' என்கிறாள்; “என் அருமை மகனே! வருக' என்று மடியில் இருத்துகிறாள்; சாருதத்தன் அகமகிழ்வதற்குக் காரணமான உரோகசேனன் இப்போது அகமகிழும் விதத்தில் பொன்வண்டியைச் செய்துகொள்ள அணிகலன்களைக் கழற்றிக் கொடுக்கிறாள்; தாயாகிறாள்; மகிழ்கிறாள் என்றாலும் இந்த மகிழ்ச்சி மறையாமல் இருக்குமா? நிலைக்குமா? நிலையாமையைத் தவிர இந்த உலகத்தில் எதுதான் நிலையானது? குழந்தை பொன் வண்டி வைத்து விளையாட வழிசெய்த வசந்தசேனை, பாவம், போலி வண்டியில் ஏற நேர்கிறது; ஆம்... சகாரன் வண்டியில் ஏறிவிடுகிறாள். (அந்த வண்டி முன்பொரு முறை பதினாயிரம் பொன் விலையுள்ள அணிகலனோடு வசந்தசேனையின் வாசலில் நின்ற வண்டி, அவளால் புறக்கணிக்கப்பட்டுச் சென்ற வண்டி. 1V). தன்னையறியாமல் சாவுப் பள்ளத்தில் இறங்கி விடுகிறாள் தான் ஏற வேண்டிய சாருதத்தனின் வண்டியில் ஆரியகன்தப்பிச்செல்லத் தன்னையுமறியாமல் உதவுகிறாள்! இங்ங்ணம் இரண்டு வண்டி மாற்றங்களுக்கு நிலைக் களனாக வசந்தசேனையைப் படைத்துக் காட்டும் ஆசிரியர் இவ்வங்கத்திற்கு வண்டி மாற்றம் என்று பெயரிட் டுள்ளார். சகாரன் வண்டியில் வசந்த சேனையும் சாருதத்தன் வண்டியில் ஆரியகனும் ஏறிச் செல்வதற்கேற்றவாறு சாருதத்தன் வீட்டை ஒட்டிய வீதியில் நிகழ்ச்சிகளை நாடக நுணுக்கத்தோடு அமைத்துள்ளார் சூத்திரகன். சந்தனகன், வீரகன் ஆகியோருக்குள் ஏற்படும் மாறுபாட்டையும் சுவைபடப் புலப்படுத்தியுள்ளார். மேலும் சார்புக் கதையின் தலைவனை முதன் முதலில் நேரடியாக