பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 77 வண்டிதானே? எனவே இந்நாடகத்திற்கு மண்ணியல் சிறுதேர் என்று பெயரிட்டது பொருத்தம்தானே? உரோகசேனனுக்கு மண் வண்டியை மாற்றிப் பொன் வண்டி செய்யும் பொருட்டுத் தன் அணிகலனை வசந்தசேனை கொடுக்கும்போது நாம் மகிழ்கிறோம். பின்னால், இச்செயலால் ஏற்படக்கூடிய தீயவிளைவைக் கண்ணுறும்போது நிச்சயம் திடுக்கிடுவோம். ஒன்பதாம் அங்கத்தில் இவ்வணிகலன் சகாரனால் தொடுக்கப்பெறும் பொய் வழக்குக்குச் சரியான சான்றாக நின்று சாருதத்த னுக்கு மரணதண்டனையை வாங்கிக் கொடுக்கிறது. இதற்கும் மண் வண்டிதானே காரணம்? "சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகார முென்னும் பெயரால் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்' என்றார் அடிகளார். அதேபோல் சாருதத்தன் குற்றவாளி யாக்கப்படும் நிலைக்கும் சூழ்வினைக்கும் காரணமா யிருக்கும் மண்வண்டியை நினைத்து நாடக ஆசிரியர் மண்ணியல் சிறுதேர் என்று தலைப்பிட்டதும் பொருத்தம் தானே?* f சூழ்வினை-சூழ்ந்த சிற்பத்தொழில் என்பது அரும்பத உரைகாரர் கூறும் உரை. எனினும் 'பலவினைகள் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சுற்றி வருதற்கு, சூழ்ந்துவருதற்கு இச்சிலம்பு காரணமாய் இருந்தமையின் சூழ்வினைச் சிலம்பு என்ற அடைபெற்றது' என்ற டாக்டர் வ. சுப. மாணிக்கத்தின் புத்துரையே இங்கு நோக்கத்தக்கது. - எந்தச் சிலம்பு, ப.22. * It may thus be seen that the clay-cart is the root of all the future trouble and hence deserves all the importance attached to it by the author by naming his play after it. - Dr. G.V. Devasthali, Introduction to the Study of Mrrcch. P.66.