பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மண்ணியல் சிறுதேர் VII ஆரியகனைக் கோடல் 'இறைப் பொருள் கோடற் (கு) எழும்வினைஞர் போலச் சிறைச்சுரும்பர் சென்றுலவும் புட்பகரண்ட கத்தில் சாருதத்தன் வசந்த சேனைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். வண்டி நெடுநேரத்திற்குப் பிறகு வருகிறது. ஆனால் வண்டியில் வசந்தசேனையா வருகிறாள்? 'பொன்னியலுந்தன் குடம்பை தனிற் காக்கை போற்றவளர் குயில்போல் போவேன்' என்று ஆரியகன் வருகிறான். மைத்திரேயனை நோக்கிச் சாருதத்தன் "வசந்தசேனையை இறக்குக' என்கிறான். 'இவள்தானே இறங்கமாட்டாளா? இவள் கால்கள் விலங்கிடப் பட்டுள்ளனவா?’ என்று வண்டியைத் திறக்கிறான் மைத்திரேயன். அவன் 'பிராமணத் தன்மை பலிக்காமற் போகுமா? காலில் விலங்கிடப்பட்டுள்ள 'வசந்த சேனனை - ஆரியகனைக் காண்கிறான். ஆரியகன் சாருதத்தனிடம் அடைக்கலம் புகுகிறான். 'உயிரை விடினும் அடைக்கலத்தை ஒம்பும் சாருதத்தன் ஆரிய கனின் விலங்கைக் கழற்ற உதவுகிறான். ஆனால் கழற்ற முடியாத அன்பு விலங்குகளைச் சாருதத்தன் அளித்து விட்டதாக ஆரியகன் கூறுகிறான். உடனே சாருதத்தனைப் பார்த்து 'விலங்குகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். நாம் (சிறைக் கோட்டம்) செல்வோம்' என்று குத்தலாகக் கூறுகிறான் மைத்திரேயன். சாருதத்தன் தன்னைப்பற்றிக் கவலைப்படாமல் நம்பிக்கையை உண்டுபண்ணும் தன் வண்டியிலேயே ஆரியகனை ஏறிச்செல்ல வேண்டுகிறான். அவனும் வாழ்த்திச் செல்கிறான். வசந்த சேனையின் கடைக்கண் அழகில் மயங்க வந்த சாருதத்தனுக்கு இடக்கண் துடிக்கிறது. ஏதேனும் இடுக்கண் ஏற்படலாம்