பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 8I ஒதெல்லோ, சிறிது நேரத்தில், இயாகோ வருகிறான். கொடுமுறைக்கு ஆளான குழந்தையைப்போல் இருக்கும் டெஸ்டிமோனாவிடம் 'என்ன செய்தி ' என்று கேட்கிறான் அப்போது, டெஸ்டிமோனா பேசாமல் இருக்கிறாள். அருகிருக்கும் டெஸ்டிமோனாவின் தோழியும் இயாகோவின் மனைவியுமான எமிலியா, ஒதெல்லோ டெஸ்டடிமோனாவைப் பரத்தை என்று திட்டிவிட்டார்; சத்திய நெஞ்சங்கள் சகிக்கவொண்ணாத வார்த்தைகளைக் கொட்டிவிட்டார் என்கிறாள். உடனே, 'இயாகோ, நான் அப்பெயருக்குரியவளா?' என்கிறாள் டெஸ்டிமோனா. 'எப்பெயர், அம்மையே என்று (ஏற்கனவே எமிலியா சொன்னதைக் கேட்ட பின்னும்) மீண்டும் கேட்கிறான் இயாகோ. ஒருவேளை, அப்பாவி டெஸ்டிமோனா வாயிலிருந்து பரத்தை என்ற சொல் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறான் போலும், அப்பாவி. டெஸ்டிமோனாவோ, கற்புக்கடம்பூண்ட பொற்புடைத் தெய்வம். உயர் பேரொழுக்கமும் தூய்மையும் மென்மைப் பண்பும்மிக்க அவளால் பரத்தை என்ற சொல்லைக்கூட உச்சரிக்க முடியவில்லை. 'என் தலைவர் சொன்னார் என்று எமிலியா சொன்னாளே அப்பெயருக்குரியவளா நான்? என்கிறாள்.' டெஸ்டிமோனாவைப் போன்ற புனிதவதிதான் வசந்தசேனையும். தீய சொல்லைத் தன் வாயால் கூறவும் கூசுகிறாள் டெஸ்டிமோனா; தீய வார்த்தையைத் தன் - * Desdemona: Am I that name, Hago? Hago: What name, fair lady? Desdemona: Such as she says my lord did say I was. - Shakespeare, Othello, Act IV. Sc. lI.