பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& மண்ணியல் சிறுதேர் செவியால் கேட்கவும் கூசுகிறாள் வசந்தசேனை. வசந்த சேனை 'தங்களைக் கூடுதற்கு வந்திருக்கின்றாள்' என்று விடன் கூறுவதை அவளால் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை. 'தீவினை ஒழிக தீவினை ஒழிக" என்று துடிதுடிக்கிறாள். உண்மையில் விடன் அவளைக் காப்பாற்றக் கருதியே தங்களைக் கூடுதற்கு வந்திருக் கிறாள்' என்றுரைத்திருக்கலாம். வசந்த சேனையும் கூடுதற்கு வந்ததைப் போல் நடித்திருக்கலாம்; பெளத்தத் துறவி, சகாரனைப் புகழ்ந்து தப்பியதைப்போல் அவளும் தப்பியிருக்கலாம் என்றெல்லாம் நாம் நினைக்கலாம். ஆனால், தன் கனவுகள் எல்லாம் கண்ணாடித் துண்டுகளாகச் சிதறியபின் வசந்தசேனையால் என்ன செய்ய முடியும்? சினங்கொள்கிறாள்; தன் கால்களில் விழும் 'சவத்தை ஒத்த சகாரனை உதைக்கிறாள். வசந்தசேனையின் பூப்போன்ற பாதம்தானே பட்டது என்று சகாரனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 'வண்டி மாற்றத்தால் வசந்தசேனை இங்கே வந்திருக்கிறாள் என்று அறிந்துகொண்டு, ஆத்திரங்கொண்டு அவளைக் கொல்லுமாறு விடனையும் சேடனையும் தூண்டுகிறான். ஒருவன் அதருமத்திற்கு அஞ்சுகிறான்; இன்னொருவன் மறுமையுலகிற்கு அஞ்சுகிறான். எனவே இருவரையும் அவ்விடத்தைவிட்டு அகலுமாறு பணித்து தன் கையே தனக்குதவி என்று வசந்த சேனையைக் கொல்லத் துணிகிறான். இறுதியாக வசந்தசேனையிடம் காமுகனாய் நடித்து வேண்டுகிறான். அவளோ, அவனைத் தூற்றுகிறாள்; சாருதத்தனைப் புகழ் உச்சிக்கு ஏற்றுகிறாள். ஆம். எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றுகிறாள். உடனே சகாரன் வசந்தசேனையின் கழுத்தை நெரிக்கிறான். அண்ணல் காந்தி ஆவி துறக்குந்தருவாயில் இராம் இராம்' என்றாராம்; ஏசுபெருமான் 'பரமபிதாவே" என்றாராம்.