பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 85

  • நாடக விறுவிறுப்பை எள்ளளவும் குறைக்க ல்லை!

"தூய்மை செய்யப்பட்டுள்ள நீதிமன்றத்தைக் களங்கப்படுத்தும் விதத்தில் சகாரன் காலடி எடுத்து வைக்கிறான். வசந்தசேனையை வறியவன் சாருதத்தன் கொன்றான் என்று வழக்கு தொடர்ந்தால் வெல்லலாம் என்று வருகிறான். நீதிபதியும் வருகிறார். நீதிபதி வழக்காராய்ச்சி செய்வதில் உள்ள இடர்பாடுகளை அடுக்கிப் 'பழிப்பெளிது புகழ்ச்சியரி(து) அறங்காண் பார்க்குறல் சுருங்கப்பகரினம்மா' என்றுரைப்பது நாடகக் குறிப்பு முரணுக்கு (Dramatic irony) நல்லசான்று இன்னும் சிறிது நேரத்தில் இவ்வார்த்தையின் உட்பொருளை அவர் உணர்ந்து கொள்வார். தொடக்கத்தில் நீதிமன்றத்தில் அனைவரும் சகாரன் மீது வெறுப்பும் சாருதத்தனிடம் பெருமதிப்பும் வைத்திருப்பதை ஆசிரியர் காட்டுகிறார். இதோ நீதிதேவன் மயங்கப் போகிறான். சகாரன் வழக்கை உரைக்கிறான். புட்பகரண்டகத்தில் யாரோ ஒருவன் வசந்தசேனை அணிகலனைக் கவரக் கருதி அவள் கழுத்தை இறுக்கிக் கொன்றுவிட்டான்; யான் இல்லை என்கிறான். நீதிபதி, உடனே 'யான் இல்லை' என்னும் சொற்களைக் குறித்துக்கொள்ள எழுத்தாளர்களுக்குக் கட்டளையிடுகிறார். இதை வைத்துச் சகாரனால் தொடுக்கப்பெறும் கணை அவன் மேலேயே திரும்பலாம் என்று எதிர்பார்க்கிறோம். பின்னர் நீதிபதி வசந்தசேனையின் தாயை அழைத்து வரச் செய்து வசந்தசேனை எங்கே போனாள் என்று கேட்கிறார். சாருதத்தனிடம் தன் மகள் இளமையை அனுபவிக்கச் சென்றாள்; ஆனால் சாருதத்தன் வசந்த