பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& மண்ணியல் சிறுதேர் சேனையைக் கொன்றிருக்கமாட்டார் என்றுரைக்கிறாள் அவள். இவ்வழக்கு சாருதத்தனைப் பற்றியது என்றறிந்து நீதிபதி அவனைப் பரபரப்பின்றி அச்சுறுத்தாமல் அன்போடு அழைத்து வர ஆணையிடுகிறார். வழக்கில் முதற்கட்டம் முடிந்து இரண்டாம் கட்டம் தொடங்குகிறது, ஆரியகனுக்குத் தான் அடைக்கல மளித்ததை அரசன் அறிந்துகொண்டான் போலும் என்று எண்ணியவாறு வழக்கு மன்றம் வருகிறான் சாருதத்தன். அவனை வரவேற்று இருக்கை அளிக்கிறார் நீதிபதி. சாருதத்தனிடம் வசந்தசேனை பற்றிக் கேட்டு அவளுக்கும் அவனுக்கும் நட்பு உண்டு என்று அறிகிறார். வசந்தசேனை 'இல்லத்திற்குப் போயினாள் என்று சொல்வதைத் தவிர வேறு எதையும் சாருதத்தனால் விளக்கிக் கூறமுடிய வில்லை. எனினும் நீதிபதி சாருதத்தனிடம் பரிவு காட்டுவதைக் குறைத்துக்கொள்ளவில்லை. இரத்தினா வளியையே கொடுத்தனுப்பிய சாருதத்தன் வசந்த சேனையை அணிகலன்களுக்காகக் கொன்றிருக்க முடியாது என்று வசந்தசேனையின் தாய் கூறுகிறாள். செட்டியும் எழுத்தாளர்களும்கூட சாருதத்தனுக்கு ஆதரவாயிருக்கிறார்கள். எனவே, சகாரன் திட்டம் தோல்வியடையப் போகிறது என்று எண்ணுகிறோம். இந்த நேரத்தில், வீரகன் என்னும் படை வீரன் வழக்கு மன்றத்திற்கு வருகிறான். ஆரியகனைத் தேடுங்கால் மறைக்கப்பட்ட வண்டி ஒன்று சென்றதாகவும் அதைத் தான் பார்க்கக் கருதியபோது சந்தனகன் என்னும் மற்றொரு படைவீரன் தன்னை உதைத்ததாகவும் உரைக்கிறான். 'அவ்வண்டி யாருடையது?" என்று நீதிபதி கேட்கிறார். 'இச்சாருதத்தருடையது. புட்பகரண்டகம் என்னும் பழைய பூந்தோட்டத்தில் விளையாடி இன்புறுதற்கு வசந்த