பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 87 சேனை ஏற்றிக்கொண்டு போகப்படுகிறாள் என்று வண்டி யோட்டி கூறினான்' என்கிறான் வீரகன். இக்கூற்றால் நீதிபதி சாருதத்தனிடம் ஐயங்கொள்ளலாம். எனினும் அவர் ஐயங்கொள்ளவில்லை; இன்னும் பரிவுகாட்டு வதைக் குறைத்துக் கொள்ளவில்லை. சாருதத்தனைக் காப்பாற்ற நினைத்தோ என்னவோ புட்பகரண்டகத்தில் இறந்த ஒரு பெண்ணின் உடல் இருக்கின்றதா இல்லையா என்று வீரகனைப் பார்த்துவரச் சொல்கிறார். வீரகன் சென்று வந்து நரி முதலிய கொடிய விலங்குகளாற் சிதைக்கப்படும் ஒரு பெண்ணின் உடலை யான் கண்டேன்' என்கிறான். இப்போது நீதிபதியின் நம்பிக்கை குறைகிறது; கை தளர்கிறது; எவ்வளவுக்கு எவ்வளவு தீர ஆராய்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு சாருதத்தன் குற்றவாளி ஆவதாக எண்ணுகிறார். சாருதத்தனை உண்மையைக் கூறுமாறு வேண்டுகிறார். அவன், தான் வசந்தசேனையைக் கொல்லவில்லை; கொல்ல முடியாது என மறுக்கிறான். அவனால் எப்படிக் கொல்லமுடியும்? 'மலர்நிறை கொடியினை மலர்கொளாசையால் உலைவுற வளைத்தலுக்(கு) ஒருப்படாதயான் குலவளிச் சிறையன குழலைப் பற்றியீர்த்(து) அலறவோர் பெண்கொலை யாற்று கிற்பனோ' என்கிறான். கொடியவனாகிய சகாரனோ சாருதத்தன் இன்னும் இருக்கையில் இருப்பது தவறு என்கிறான்.

  • The fine sentiment expressed here takes one to an equally delicate situation in Abhijnana-Sakuntala where Sakuntala is described by her father in similar words (IV......She loves to adorn herself with flowers but she loves you-trees-more than that and so she doesn't pluck a single sprout).

- R.V. Jagirdar, Drama in Skt.Lit. P, 104.