பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& மண்ணியல் சிறுதேர் சாருதத்தன், இருக்கையைவிட்டு எழுகிறான். இப்போது சகாரன் அதில் அமர்கிறான். இங்கே வழக்கின் இரண்டாம் கட்டம் முடிந்து மூன்றாம் கட்டம் தொடங்குகிறது. சாருதத்தன் "வழக்கை ஆராயுங்கள். நீதிபதிகளே வழக்கை ஆராயுங்கள் என்கிறான். இதைத்தவிர அவனால் வேறு என்ன சொல்லமுடியும்? உரோகசேனனுக்கு வசந்தசேனை அளித்த அணிகலன்களைத் திருப்பிக் கொடுத்தற்கு வசந்த சேனை இல்லம் சென்ற மைத்திரேயன் ஏன் இன்னும் வரவில்லை என்று சிந்திக்கிறான். வந்தால் வசந்தசேனை பற்றிய செய்தியைக் கூறுவான்; தன்மீது 'சுமத்தப்பட்டுள்ள பழி ஒழியும் என்று நம்புகிறான். எதிர்பார்த்ததைப் போலவே மைத்திரேயன் வசந்த சேனை வீட்டுக்குப் போகாமல், அணிகலன்களைக் கொடுக்காமல் சாருதத்தன் வழக்கு மன்றத்தில் இருப்பதறிந்து ஒடோடி வருகிறான்; காப்பாற்ற வருகிறான். சாருதத்தனைப் பழிக்கு ஆளாக்கிய சகாரனை அடிக்கிறான். அவனும் அடிக்கிறான். அப்போது மைத்திரேயனின் கக்கத்தினின்றும் அணி கலன்கள் வீழ்கின்றன. இதுவரை நன்னம்பிக்கை முனையின் ஒரத்திலாவது நின்று கொண்டிருந்தான் சாருதத்தன். இப்போது அதற்கும் வழியில்லை. இனி வீழவேண்டியதுதான் மைத்திரேயன் தன்னையுமறியாமல் சாருதத்தன் வீழ்ச்சிக்குக் காரணமாய் விட்டான். பாவம், அவனைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் அந்த மண் வண்டியின் திருவிளையாடல்! இதோ, சகாரன் குதிக்கிறான். 'இச்சிறுபொருள் காரணமாகவே அவள் கொல்லப்பட்டாள்' என்று கூக்குரலிடுகிறான். எழுத்தாளனும் செட்டியும் வசந்தசேனையின் தாயை நோக்கி இவ்வணிகலன்கள் வசந்த சேனைக்குரியனவா என்கிறார்கள். அவள், நல்லெண்ணத்தோடு இல்லை’ என்கிறாள். சாருதத்தனோ வசந்த சேனைக்குரியவை