பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 89 என்கிறான். எதையும் அவன் விளக்கிச் சொல்ல விரும்பவில்லை; தன் வறுமை நிலையை வெளிப்படுத்த விரும்பவில்லை; மேலும் வசந்தசேனையைப் பிரிந்து வாழவும் விரும்பவில்லை. எனவே இறுதியாகக் 'குறையுள செய்தியைக் கூறுவான் இவன்' என்று சகாரனைக் காட்டுகிறான். 'யான் கொன்றேன் என்று நீயும் சொல்' என்று சகாரன் கேட்கிறான். 'நீயே சொல்லிவிட்டாயே' என்று சாருதத்தன் பதிலிறுக்கிறான். நீதிபதி, சாருதத்தன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான் என்று கருதுகிறார். ஆயினும் மறையவனைக் கொல்லக் கூடாது என்னும் மனுநீதியைப் பின்பற்றி சாருதத்தனை அவன் உடைமையோடு (இன்மை அல்லது வறுமைதான் அவன் ஒரே உடைமை) நாடு கடத்தலாம் என்று ஏவலன் மூலம் அரசனுக்குப் பரிந்துரை செய்கிறார். அரசன் பாலகனோ அவ்வுரையை ஏற்கவில்லை. சாருதத்தனைக் கழுவில் ஏற்றிக் கொல்லுமாறு கட்டளை பிறப்பிக்கிறான். சாருதத்தன் இறுதியாகத் தன்னைப் பெற்ற தாயையும் தான் பெற்ற சேயையும் நினைக்கிறான். 'என் புதல்வன் உரோகசேனனைக் காப்பாற்று' என்று மைத்திரேயனிடம் வேண்டுகிறான். அவன்ோ, "வேர் அறுக்கப்படின் மரம் எங்ங்னம் காப்பாற்றப்படும்?' என்று வருந்துகிறான். நடுவூருள் நச்சுமரம் (சகாரன்) இருக்க நல்ல மரத்தின் பயன் மரத்தின் வேரை அறுக்கப் போகிறார்களே என்று நாமும் வருந்துகிறோம். நீதியின் மார்பில் வஞ்சகத்தின் வாள் பாய்வதை நன்றாகச் சித்திரித்துள்ளார் நாடக ஆசிரியர். நீதிபதி சாருதத்தனிடம் அன்போடும் அனுதாபத்தோடும் நடந்து கொள்கிறார்; ஆரம்பத்தில் அவனுக்குச் சார்பாகக்கூட இருந்திருக்கிறார். எனவே அவர் வழக்கைச்சரியாக நடத்த