பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மண்ணியல் சிறுதேர் காட்ட வேண்டுவதும், தன்னைத் தழுவிய மைந்தனுக்குக் கொடுக்க ஒன்றுமின்றிப் பூணுாலைச் சாருதத்தன் கொடுப்பதும் 'என்னைக் கொல்லுங்கள்; என் தந்தையை விடுங்கள் என்று உரோகசேனன் கெஞ்சுவதும், “என்னைக் கொல்லுங்கள்' என்று மைத்திரேயன் புலம்புவதுமாகிய காட்சிகளைத் தொடர்ந்து நிகழச் செய்து நாடக ஆசிரியர் நம்மைத் துன்பக் கடலில் தோணி யாக்குகிறார். மீண்டும் பறை சகாரன் மனைக்கருகே அடிக்கப் படுகிறது. அம்மனையின் மேல் மாடத்தில் (கீழ்மகன் சகாரனால்) விலங்கிடப்பட்டிருக்கும் சேடன் தாவரகன் செவியில் சாருதத்தன் கொலைக்களப் படப்போகும் அவலச் செய்தி விழுகிறது. சகாரனின் தகாத செயலை எண்ணித் தாவரகன் மனங்கொதிக்கிறான்; மாடத்திலிருந்து குதிக்கிறான். சண்டாளர்களிடம், சகாரனே வசந்த சேனையைக் கொன்றான்; நான் இதை வெளிப் படுத்துவேன் என்று அஞ்சி என்னைக் கட்டிப் போட்டான் என்கிறான். அவன் உரையைக் கேட்டு 'பைங்கூழ் செழிக்கப் பயன்செய் கருமுகில் போல் இங்குற்றான் யாவன் இவன்?' என்று சாருதத்தன் வியக்கிறான். நம் இருண்ட உள்ளத்திலும் திடீரென்று நம்பிக்கை ஒளி உண்டாகிறது. ஆனால் அது ஒரு வினாடிதான் நிலைக் கிறது. அடுத்தவினாடி சகாரன் வருகிறான். தன்னுடைய பொற்காப்பைத் திருடியதால் சேடனைத் தான் கட்டிப் போட்டதாகவும் அதற்காக அவன் இப்படித் தன்தலையில் பழியைத்துக்கிப் போட்டதாகவும் கூறி எல்லாரையும் நம்ப வைக்கிறான். சிறிது நேரத்தில், கொலைக்களத்தில் தண்டனை நிறைவேற்றப்படும் சமயத்தில், சம்வாகக