பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 93 னோடு வசந்தசேனை வருகிறாள். சாருதத்தனை வெட்ட ஓங்கிய வாள் கீழே வீழ்கிறது. வாள்விழியாள் வசந்த சேனை சாருதத்தனின் மார்பில் வீழ்கிறாள். நல்லவேளை, சாருதத்தன் பிழைத்துக் கொள்கிறான். ஆனால், சகாரன் பிழைத்துக்கொள்ள முடியுமா? இறுதியாக, சருவிலகன் வருகிறான். பாலகன் மடிந்ததையும் சாருதத்தனால் காப்பாற்றப்பட்ட ஆரியகன் அரசன்ஆனதையும், குசாவதியைச்சார்ந்த நாட்டுரிமையை நட்புரிமையோடு ஆரியகன் சாருதத்தனுக்கு அளித்துள்ள தையும் உரைக்கிறான். சாருதத்தன் மகிழ்கிறான் எல்லா இன்னலுக்கும் காரணமான சகாரனை இழுத்து வருகிறார்கள். பாவம், சகாரன் சாருதத்தனிடம் அடைக் கலம் புகுகிறான். சாருதத்தனோ, தலைவன்; மாட்சிமிக்க தலைவன். எனவே மன்னிக்கிறான்; மறக்கிறான். சாருதத்தனோடு வாழ்வது இல்லாவிட்டால் சாவது என்றிருந்த வசந்தசேனைக்குக் குலமகளிர்க்குரிய வது என்னும் தகுதியை ஆரியகன் அளித்ததையும் சருவிலகன் கூறுகிறான். இப்போது, மீண்டும் நம் வேட்கை உணர்வை (Suspense) தூண்டும் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது.துதை த தலைவனுக்கு நேரும் அமலங்கலத்தைக் கேட்க அஞ்சி, தீப்புக முனையும் செய்தி அறிவிக்கப்படுகிறது. சாருதத்தன் விரைந்துசென்று அவளைக் காப்பாற்றுகிறான். வசந்த சேனையும் தூதையும் தழுவிக்கொள்கிறார்கள். முன்னமே வசந்தசேனை சாருதத்தனை மாமரம் என்று சொன்னாள் அல்லவா? இப்போது அம்மரத்தில் ஒரு மரத்தில் இருகொடிகள் தழுவிப் படரப்போகின்றன.