பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்புறம் 1 நாடக மாந்தர் வடமொழி நாடகங்களுள் மிருச்சகடிகம் அல்லது மண்ணியல் சிறுதேர் எண்ணிக்கையில் மிகுதிய்ான பாத்திரங்களைப் பெற்றுள்ளது; அறிவாற்றல் படைத்த நீதிபதி முதல் அரிவாள் ஆற்றல் படைத்த கொலைஞர்கள் வரை சமூகத்தில் எல்லாத்தரப்பினரையும் பெற்றுள்ளது. சூத்திரகன், ஒவ்வொரு பாத்திரத்தையும் தனித் தன்மையோடு மேடையில் உலவவிடுகிறார்; விதூடகன், விடன் போன்ற மரபுவழிப் பாத்திரங்களையும் புதிய முத்திரையோடு தோன்றச் செய்துள்ளார். மேலும் விடன், சேடன், சேடி, சூதன், படைத்தலைவன், சண்டாளன் முதலிய பாத்திரங்களை இணையிணையாய் (இருவராய்) அறிமுகப்படுத்தி அவர்களுக்கிடையே நுட்பமான வேறுபாட்டையும் காட்டுகிறார். எல்லாப் பாத்திரங்களும் சாருதத்தனை மையமாக வைத்து விளங்குமாறும் செய்துள் ளார். எனவே சாருதத்தனை முதலில் சந்திப்போம். 1 சாருதத்தன் செவிகளுக்கு மட்டுமின்றி கண்களுக்கும் இன்ப மளிக்கும் நாடகமாகிய மண்ணியல் சிறுதேரின் தலைவன்