பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 55 சாருதத்தன். 'இவர் செவிக்கு மாத்திரம் இன்பஞ் செய்பவரல்லர் கண்களுக்கும் இன்பஞ் செய்கின்றவர்" (VII) என்று சாருதத்தனின் நீடுதோன்றினிய தோற்றத்தைக் கண்டு களிக்கிறான் ஆரியகன். "உயர்ந்த மூக்கொடு கடையகல் விழியனையுடைய நயந்த இம்முகம் ஏதுவில் நவைக்கிடனாகாது"(IX) என்று சாருதத்தனின் முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் நீதிபதி 'உத்தம இலக்கணம் உடையவன்' அவன் என்று முடிவு கட்டுகிறார். இப்படி ஆடவர் அவாவும் அழகு படைத்த சாருதத்தனிடம் வசந்த சேனை மனம் பறிகொடுப்பதில் வியப்பில்லையல்லவா? "என்மகள் தன் யெளவனத்தை நல்லிடத்தில் வைத்துப் பயன்படுத்தினாள் (IV) என்று வசந்தசேனையின் தாய் சாருதத்தனை முதன் முதலில் கண்டதும் வியந்துரைக்கிறாள்; தன் மகளை பாராட்டு கிறாள்! உச்சயினி நகரத்தில் முதல் அழகனாக மட்டுமல்லாமல் அழகின் சிரிப்பை அனுபவிக்கும் முதற் சுவைஞனாகவும் சாருதத்தன் விளங்குகிறான். காமதேவாயதனம், புட்ப கரண்டகம் என்னும் பூஞ்சோலைகளின் வனப்பில் மயங்கும் கலை உள்ளம் அவன் உள்ளம் வேறொருவனா யிருந்தால் தன் வீட்டில் கன்னமிடப்பட்ட செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் கலங்கியிருப்பான். அவனோ, கள்வனின் கைவண்ணத்தைப் பாராட்டுகிறான். 'ஆ' ஆ! இக்கன்னத்துளை அழகாக இருக்கின்றது' என்கிறான். வேறொருவனாயிருந்தால், திடீரென்று நீதிமன்றத்திற்குள் நுழைய நேருவதற்கு அஞ்சியிருப்பான்; மயங்கி யிருப்பான். அவனோ, 'ஆ இந்நீதிமன்றத்தின் சிறந்த அழகு என்னே (TV) என வியக்கிறான். மனிதன் இசைபட வாழ்வதோடு அவ்வப்போது செவியில் இசைபடவும்