பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 4 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் தயிர். மோர் - இவற்றை சோற்றுடன் கலந்து சாப் பிட்டால் உணவு எளிதில் சீரணிக்கும். சடராக்னி அதிகரிக் கும். பித்தம், மேகச்சிறுநீர், பாண்டு, தாகம். சோபை நீங்கும். பிரியாணிச் சோறு-இது நல்ல வலுவையும், தாது விருத்தியையும் கொடுக்கும் ஆணுல் இதனை அளவோடு சாப்பிடவேண்டும். இல்லையேல் பசிமந்தம் ஏற்படும். கூட்டாஞ்சோறு (கதம்ப உணவு)-நல்ல புழுங்கலரிசி யுடன் மிகுதியான பல்சுவை காய்கறிகள் சேர்த்து சமைக் கப்பட்ட உணவு இதுவாகும். இவ்வுணவும் உடலுக்கு வலு வையும், உள்ளத்திற்கு உற்சாகத்தையும் கொடுக்கும். இத னைச் சாப்பிடுகின்றவர்கள் மோர்ச் சோற்றையும் இஞ்சித் துவை யலையும் இறுதியில் சாப்பிடுவது மேலும் நன்மை பயக்கும். பால் கஞ்சி-ஆவின் பால் சேர்ந்த பச்சரிசிக்கஞ்சி பித்தம், பித்த எரிச்சல் ஆகியவற்றை நீக்கும். அறிவுத் தெளி வும், தாது விருத்தியும் ஏற்படும். நெற்பொரிக் கஞ்சி-பயித்தியத்தை நீக்கும். கோதுமைக் கஞ்சி-வாதசுரம், நீரேற்றல், கபசுசம், + -- ୩ # == சன்னி முதலியவைகளை நீக்கும். அன்னப்பால் கஞ்சி-இது புழுங்கலரிசிக் கஞ்சியாகும். இதில் காணும் சோற்றை ஓரளவு குறைத்து, தெளிவை மிகுதி யாகச் சாப்பிடுதலும் உண்டு. காய்ச்சலால் நலிவுற்ருேர்க்கு இது களைப்பை நீக்கி, நன்கு நீர் பிரியச் செய்து உடற் சூட்டைத் தணித்து வலுவினைக் கொடுக்கும். பழஞ்சோறு-இதனை நாம் காலையில் நீராகாரத்துடன் கலந்து சாப்பிட்டுவரின் தாது விருத்தியும் உடற்பொலிவும் எற்படும். ஆளுல் இதனை மோருடன் கலந்து சாப்பிட்டால் டம்பு எரிச்சலும் பித்தத்தால் ஏற்படும் சகல நோய்களும் நீங்கும். உறக்கம் ஏற்படும்.