பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவு £5 அரிசிமாவுப் பிட்டு-உடலுக்கு வலுவையும், சூட்டையும் கொடுக்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப் போக்கு மிகு தியாக இருப்பின் அதனேக் கட்டுப் படுத்தும். கோதுமை அடை-இதனுல் உடல் வலிவும், ச.ாாக்னி யும் தாது விருத்தியும் உண்டாகும். அரிசி அவல் உணவு-அவலுடன் பால், நெய் சேர்த்து உண்ணில் பித்தம் நீங்கும். அவலே நீரில் நனைத்து ன் டால் தாகம், பயித் தியம், மயக்கம், அதிசாரம் (மிகுதிக் கழிச்சல்) பசியின்மை ஆகியவை நீங்கும். அவல் பாயசத் தில் நெய், பால் கலந்து சாப்பிட்டால் மலபந்தம், வாந்தி, பித்தம், இாேப்பு முதலியவை நீங்கும்.