பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 | பழக்க வழக்கங்கள் نهنl சக் காய்கறி ஆகியவற்றை நாம் உபயோகப் படுத்தவேண் ம்.வைட்டமின் பி(18) இல்லாதிருப்பின் பற்கள் தேய்ந்து சாத்தையாகி நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு, பெரி பெரி (It i :ri) நோயும் உண்டாகும். இவற்றை நீக்க நாம் பழங்க ஃப னவோடு சேர்க்கவேண்டும். சி(C) வைட்டமின் குறைந்துவிட் டால் ஈறு விங்கி, டித்து, இரத்தம் உறைந்து பயோரியா நோய் உண்டாகும். 随 நீக்க ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, நெல்லிக்காய் தலியவைகளை நாம் பயன்படுத்தலாம். வைட்டமின் tą (D) குறைந்தால்,பற்சொத்தை ஏற்பட்டு விழுவதற்கு ஏதுவாகும். இதனை நீக்க பால், முட்டை நற்றும் சுண்ணச் சத்துள்ள உணவுப் பொருட்களை நாம் சேர்க்கவேண்டும். ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்ற iழிமொழி இங்கு நினைவு கூறத்தக்கது. பல் துலக்குவதற்கு ஆல விழுதினையும் வேப்பங் குச்சியினையும் நாம் பயன்படு2.: வந்தால் பற்கள் என்றும் உறுதியாக விளங்கும். | o ாளும் நீராடுக ! --- “கந்தையானலும் கசக்கிக் கட்டு, கூழாகு லும் குளித்துக் குடி” என்ற பைந்தமிழ் மொழியின நாம் அறிவோம். இதனது பொருள் ஒருவன் தனது ஆடையினே பும் உடலினையும் எப்பொழுதும் சுத்தமாகவே வைத்திருக்க வேண்டுமென்பதாகும். கந்தைத் துணியாகவே இருந்தாலும் அதனை நாளும் துவைத்து அழுக்கைப் போக்கி ஒருவன் அதனை உடுத்த வேண்டும். அவ்வாறே தான் சாப்பிடுகின்ற உணவு எளிமையான கூழானலும் குளித்த பின்னரே அதனே ஒருவன் சாப்பிட வேண்டும். இவ்விரண்டினையும் நாம் சரி வரக் கடைப்பிடித்துவரின் பல நோய்களினின்றும் நீங்கி உடல் நலத்தோடு நெடிது வாழ முடியும். குளிர்ந்த நீரில் குளித்தால் உடல் நலமும் இரத்த சுத்தியும் மிகும். கால்வாய் நீரில், அதாவது ஓடும் நீரில் குளித்தால், நரம்புத் தளர்ச்சி நோய் குறையும். அருவியில் நீராடின், பித்தமும் தரம்புத் தளர்ச்சியும் பெருமளவு நீங்கும்.