பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம ஒரு சிலர் இருதயம் இறங்கி விட்டதென்று கூறுவர். அது இருதயத் தளர்ச்சியினையே குறிக்கும். உடல் உழைப் பாளிகளை விட, மூளை உழைப்பாளிகளிடந்தான் இருதயத் தசைகள் இரண்டு மூன்று மடங்கு அதிகமாக உள்ளன . அத்தசைகளுக்கு நல்ல இ ய க் க ம் வேண்டும். அதனுல் நோயற்ற நீண்ட வாழ்வினை தாம் பெற முடியும். உடல் இயக்கம், மேலும் பல நன்மைகளை நமக்குச் செய்கின்றது. நினைவாற்றலை அது பெருக்குகின்றது. இரத்தத் தில் கொலோஸ் டிரல் (Cholostral) என்னும் கொழுப்புச் சத்து படிவதை அது தடுக்கின்றது. முன்னர் கூறியபடி இரத்தக்குழாய் மண்டலங்களின் இயக்கம் பலப்படுவதற்கு அது துணை செய்கின்றது. தசைகளின் இயக்கம் முதுமை விரைவில் வராமலிருப்பதற்கு பெரிதும் உதவுகின்றது. தசை நார் களின் இயக்கத்தை அதிகப்படுத்துவதற்கு நாம் 'சர்வாங்க ஆசன'ப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். உண்மையான உடல் உழைப்பும், அவ்வுழைப்பினே உற்சாகத்துடன் செய்யக்கூடிய இயல்பும், ஒருவனே நீண்ட காலம் வாழச்செய்கின்றன என்பது பலர் கண்ட உண்மை யாகும். இவ்விரண்டினையும் தங்களது வாழ்க்கையில் கடைப் பிடித்த காரணத்தினுல்தான் அறிஞர் பெர்னட்ஷா, பொறி இயல் நிபுணர் விசுவேசரய்யா, ஈ.வெ. ராமசாமிப்பெரியார் முதலியவர்கள் நீண்டகாலம் வாழ்ந்து மக்களுக்காகப் பல அரிய தொண்டுகளைச் செய்யமுடிந்தது. எவரும் எளிதில் செய்யக்கூடிய தேகப்பயிற்சி பகலவன் வணக்கமாகும் (சூரிய நமஸ்காரம்). அதிகாலையில் பகலவன் முன்னின்று முறைப்படி வணங்குதலே பகலவன் வணக்க பாகும். அதாவது இளஞ்சூரியன் எதிர்நின்று அவனை வணங்கவேண்டும். அதுகால் சூரிய ஒளி நமது கண்களிலும் As I லி லும் நன்கு படுகின்றது. அதல்ை கண்ணும் உடலும் வலுவடைகின்றன. -9 த் து - ன் ஆயுளும் நீடிக்கும்.