பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

", ( ) மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் பொழுதும் மிகாதவாறு தடுக்கும். எலுமிச்சம்பழச்சாற்றில் A ( ) வைட்டமின் சத்து இருப்பது நமக்கு நன்கு தெரியும். %) பொற்றலைக் கையான்தகரை, குப்பைமேனி இலை, சிறு குப்படை م، (ما )காஜம் மூன்று மூலிகைகளும் { இ&ல மட்டும் ندی 3 )اں t ٹ) வண்டிய அளவு சேகரித்து நிழலில் உலர்த் தி, ஒவ்வொன் | யும் தனித்தனியாக இடித்துத் தூளாக்கி. இளந் துணி யில் வடிகட்டி (வஸ்திரகாயம்) எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மூன்றும் சமஅளவு இருக்க வேண்டும். இப் பொடியினை இரவில் படுப்பதற்கு முன்னர் திரிகடிகை அளவு (பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகிய மூன்றும் சேர்த்து எடுக்கும் அளவு) பசும்பாலில் சிறிதளவு பனங்கத் கண்டு சேர்த்துச் சாப்பிட வேண்டும். இச்சூரணத்துடன் வில்வ இலைப் பொடியினையும் சேர்த்துச் சாப்பிடுவது உண்டு. (இ) வேப்பங் கொழுந்து-மஞ்சள்-வசம்பு எளிய முறையில் கிடைக்கக் கூடிய வேருெரு காய கல்பம் உள்ளது. அது உடலுக்கு வனப்பையும் வ.இவையும் ரைட்டுவது ஆகும். அக் காயகல்பம் வேப்பங்கொழுந்து மஞ் சஸ். வசம்பு ஆகிய மூன்றின் கலவையால் ஆயது. இம்முன் றி&னயும் வேண்டிய அளவு எடுத்து மூன்று நாட்களுக்குப் பயன் படுத்தக்கூடிய நிலையில் விழுதுபட அரைத்து, உருண் டையாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். காலேயில் குளிக் கின்றபோது இதனை உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பின் உடல் என்றும் இனமையோடும், வனப்போடும் விளங்கும். வசம்பினைச் சுத்தப்படுத்தி குறைந்த அளவு சேர்க்க வேண்டும். பெண்களுக்கு இது மிகவும் பயன் தரக் கூடியதாகும். ஒரு சிலர் வேப்பம் பூவினையும் வித் தினேயும் சேர்த்துக் கொள்வர். மற்றுஞ் சிலர் சுத்தமான சூடாக்கிய ஆவின்பாலில் இக்கல வையினைக் கலந்து உபயோகிப்பர். மஞ்சள். கிருமி நாசினி யாகும். அவ்வாறே வேப்பங் கொழுந்தும், வசம்பும் நமக்குத் தீமை செய்யக் கூடிய கிருமிகளை அழிக்கக்கூடிய ஆற்றல்