பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S( ) மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் 'கும். அதே நேரத்தில் முற்றிய வெள்ளரிக் காயோ அன்றி பரமோ நமக்கு ஊறு செய்யும். இதனை, 'பிஞ்சு வெள்ளரிக்காய்க்குப் பேசுதிரிதோடம்போம், வஞ்சியரே முற்றிய காய் வாதமாம், நைஞ்சகனி உண்டாற் சயித்தியமாம், உள்ளிருக்கும் அவ்விதையைக் கண்டாலும் நீரிறங்குங் காண்' ன்ற பாடல் வரிகளால் நாம் அறியலாம். பேருண்டி பெருங்கேடாகும். பசியறிந்து அளவாக உண்பவன்பால் இன்பம் உண்டாகும். அதுபோல் கண்ட மட்டும் தின்று கண்மூடிக் கிடக்கும் ஒருவனிடத்து நோய் நிலைத்து நிற்கும். அதாவது பசியளவு அறியாது ஒருவன் மிகுதியாக உண்ணுவானுன் அவனுக்குப் பல நோய்கள் ஏற் படும். தன்பசிக்கு அதிகமாக ஒருவன் சாப்பிடுவாளுகின் உரிய காலத்தில் உணவு சீசனியாது. இதனை அறியாது வழக்கப்படி மேலும் மேலும் அவன் உண்ணத் தொடங்கி வயிற்றுத் தீயை அதவாது உதராக்கினியைக் கெடுத்து விடுவான். அதனுல் நாளடைவில் பல கொடிய பிணிகள் அவனுக்கு ஏற்படும். எனவே நாம் என்றும் எந்நிலையிலும் அளவோடுதான் உண்ண வேண்டும். இது கருதியே 'அளவுக்கு மிஞ்சில்ை அமிர்தமும் நஞ்சமாம்' என்று பண் டையோர் கூறிச் சென்றனர். இக்கருத்துக்களை 'இழிவறிந் துண்பாண்க இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான் கண் நோய்' “தியள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்' ஆகிய குறட்பாக்களால் நாம் அறியலாம். மருத்துவருக்கு ஓர் அறிவுரை ஒருவனுக்கு நேர்ந்த நோயை எவ்வாறு நீக்குவது? மருத்துவர் ஒருவனுக்கு ஏற்பட்ட நோயைத் தீர்க்க விரும் பில்ை, முதலில் நோய் நிலையைத் தெரிந்து, அது வருவதற்