பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சங்க இலக்கியம்

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என்று தமிழ்நாட்டின் தொன்மையும் , கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி என்று தமிழ்க் குடியின் பழமையும்’ என்று பிறந்தவள் என்று உணர முடியாத இயல்பினள்’ என்று தமிழ்மொழியின் நீண்ட நெடும் வரலாறும் சுட்டப் படக் காணலாம். ‘எள்ளினின்று எண்ணெய் எடுபடுவது போல் இலக்கியத்தினின்று எடுபடுவது இலக்கணம்’ என்பதற்கிணங்கத் தொல்காப்பியம் எனும் இலக்கண நூல், எண்ணற்ற இலக்கியங்கள் கண்டு எழுதப்பட்ட இலக்கண நூல் எனலாம். மேலும் தொல்காப்பியனாரே பலவிடங்களில் என்ப’, என்மனார் புலவர்”, நுவல்ப துண்னிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே’, மொழிப’ என்று தமக்கு முற்பட்ட வழக்கைச் சுட்டுவதனால் தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழில் இலக்கண நூல்களும் இருந்திருக்கவேண்டும் எனலாம். “வடிவேலெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக், குமரிக்கோடும் கொடுங் கடல் கொள்ள, வடதிசைக் கங்கையு மிமயமும் கொண்டு தென்திசை யாண்ட தென்னவன் வாழி’ என வரூஉம் சிலப்பதிகார அடிகளும், சிலப்பதிகாரத்திற்கு முன்னர் எழுத்த கற்றார் ஏத்துங் கலித்தொகையில்-அதிலும் முல்லைக்கலியில்,

LL ண்.-1