பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் சமுதாயமும் 9 I

சேருபவரையும் கொன்றுவிடும் என்று சுட்டுகின்றார். இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு போன்றவற்றுக்குச் சினம் அடிப்படைக் காரணம் என்பதை இன்றைய மருத்துவ நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அடுத்து, இன்னா செய்யாமையைத் தி ரு வ ள் ளு வ ர் வலியுறுத்துகின்றார். இன்னா செய்யாமை என்பதை விளக்கும் பரிமேலழகர் ‘தனக்கு ஒருபயனோக்கியாதல், செற்றம்பற்றியாதல், சோர்வானாதல் ஒருயிர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை’ என்று குறிப்பிடுகின்றார். இன்னாசெய்வாரை எச்சரிக்கும் திருவள்ளுவர்,

பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் றமக்கின்னா பிற்பகற் றாமே வரும்.

-திருக்குறள்; இன்னா செய்யாமை 9

என்று செய்பவனுக்கு வரும் தீங்கை எடுத்துக்காட்டிச் சமூக ஒற்றுமைக்கும் அ ைம தி க் கு ம் வழிகாட்டுகின்றார். அவ்வாறன்றி ஒருவர் இன்னா செய்துவிட்டாலும் அதைப் பொறுத்தருள வேண்டும். ஏனெனில் உலகில் அனைவரும் ஒரே நிலையில் இருப்பதில்லை. சூழ்நிலை, குடிப்பிறப்பு, கல்வி அறிவு, .ெ ச ல் வ நி ைல ஆகியவற்றிற்கேற்ப ஒவ்வொருவரது நடத்தையும் அமைகின்றது. ஆகையால் சமுதாய உறுப்பினர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வினால், ஒருவர் இன்னாசெய்தல் என்பது இயல்பானது. அப்போது அதைப் பொறுத்து வாழ்வதே சிறப்பு என்பதை,

இறுத்தின்னா செய்தவக் கண்ணு மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்.

-திருக்குறள்; இன்னாசெய்யாமை : 2

என்றவாறு விளக்கும் திருவள்ளுவர் இதற்கும் ஒருபடிமேலே போய் அறநூலாசிரியர் என்னும் முறையில்,